Citizen
கலந்து கட்டி அடிப்பவன் :-)
Saturday, July 28, 2012
Tuesday, March 06, 2012
The Descendants (2011) - English
George Clooney, இவர தெரியாத ஹாலிவுட் ரசிகர்களே இருக்க முடியாது. ஆர்பாட்டம் இல்லாம நடிக்கறதுல மன்னன். இந்த படம் மட்டும் என்ன விதிவிலக்கா??சும்மா பிச்சு உதறிருக்கார் மனுஷன்.
அப்படி என்னதான்யா கதை???
Matt King (க்ளூனி), ஹவாய் மாகானத்துல இருக்குற Honolulu அப்படின்ற ஒரு கடற்கரை நகரத்துல வாழற ஒரு வக்கீல். இவருடைய குடும்பம் ஒரு பாரம்பரியமான மன்னர் குடும்பம். அந்த வகைல இவர் குடும்பத்துக்கு 25000 ஏக்கர் நிலம் Kaua'i என்ற ஊருல கடலுக்கு பக்கத்துல இருக்கு. அந்த நிலத்தோட trustee இவருதான். ஆனா இவருடைய Cousins கொஞ்சம் பேரு இருக்காங்க அவங்க அனுமதி இல்லாம இவரால தனியா எந்த முடிவும் எடுக்க முடியாது. இவருடைய மனைவி Elizabeth அப்புறம் Alexandra , Scottie ன்னு ரெண்டு பொண்ணுங்க. இவருக்கும் இவரோட மனைவிக்கும் தகராறு. அதனாலேயே இவரு குடும்பத்தோட ஒரு ஒட்டுதல் இல்லாமையே இருக்காரு. இந்த சமயத்துல Elizabeth க்கு ஒரு விபத்துல தலைல அடிபட்டு நினைவிழந்து கோமால இருக்காங்க. அப்போத்தான் இவரோட பெரிய பொண்ணு மூலமா Elizabeth க்கும் அதே ஊருல இருக்கும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் Brian Speer க்கும் தொடர்பு இருந்தது தெரிய வருது. அதுக்கு அப்பறம் இவரு என்ன செஞ்சாரு, அவங்க மனைவி உயிர் பிழைச்சு வந்தாங்களா அப்படீங்கறத நீங்க டவுன்லோட் பண்ணியோ தியேட்டர்ல போய் பார்த்தோ தெரிஞ்சுகோங்க.
க்ளூனி, மணவாழ்க்கையில் தோல்வி அடைஞ்ச மனைவியால் ஏமாற்றப்பட்ட கணவன், பொறுப்பான அப்பா என ரெண்டு விதமான கேரக்டர். தன்னோட கோவத்த மகள்கள் கிட்ட காட்டாம அவங்க செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு அதேசமயம் அவர்களுடைய தவறை அவர்களுக்கு புரியவைத்து வழிநடத்தும் பொறுப்பான அப்பான்னு கலக்கிருக்காரு. இந்த படத்துல வர எல்லாருமே அவ்ளோ அழகா நடிப்புன்னே சொல்லமுடியாதபடி நடிச்சுருக்காங்க. குறிப்பா பெரிய பொண்ணா வர்ற Shailene Woodley அப்புறம் 10 வயசுல வயதொறந்தாலே பன்னீரும் தேனுமா பேசுற Spoilt Child Amara Miller க்லூனிக்கு சமமா செமையா நடிசிருக்குகாங்க இந்த ரெண்டு பொண்ணுங்களும்..
Shailene Woodley |
Amara Miller |
கொஞ்சம் மெதுவா போற படம்தான், ட்விஸ்ட் கிஸட்டு எல்லாம் பெருசா ஒன்னும் கிடையாது ஆனா கண்டிப்பா போரடிக்காம போகும். அதனால கண்டிப்பா பாருங்க.
-சிடிசன்
Labels:
George Clooney,
The Descendant,
ஆஸ்கார்,
சினிமா,
விமர்சனம்
உ.பி : இரு வாரிசுகள் நடத்தும் போர்
முன்குறிப்பு:
இந்த பதிவு நான் போனவாரம் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சு draft ல இருந்தது. இப்போ பதிவ முடிச்சு போடறதுக்குள்ள முடிவே தெரிஞ்சு போச்சு :( முலாயம் சிங் தான் அடுத்த முதல்வர், மாயா அக்கா 2nd ,காவி ௩, பழைய கதர் 4 .இருந்தாலும் கஷ்ட்டப்பட்டு இவ்ளோ எழுதினத கொஞ்சம் படிச்சிருங்க ப்ளீஸ் :-)
காங்கிரஸ்:
காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி கட்சியை இந்த தேர்தலில் கரை சேர்த்துவிடவேண்டும் என்று முழு மூச்சாக களமிறங்கியுள்ளார். அவருக்கு பக்கத்துணையாக அவரது அக்கா பிரியங்கா வதேராவும்??(அவங்க அம்மா சோனியா திருமணத்திற்கு பின் சோனியா காந்தி ஆன மாதிரி இவங்களும் பிரியங்கா வதேரா ஆரதுதானே முறை :-)) மற்றும் அவர் குடும்பத்தில் உள்ள அனைத்து நண்டு சின்டுகளும் களமிறங்கியுள்ளனர். ஆனா கட்சி இப்போ அங்க இருக்குற நெலமைல அவங்க எல்லாம் என்னதான் தலைகீழ நின்னு தலையால தண்ணி குடிச்சாலும் ஒன்னும் தேறாது போல.
பி.ஜே.பி:
இவங்களும் கிட்டத்தட்ட காங்கிரஸ் நெலமைலதான் இருக்காங்க. என்ன இவங்களுக்கு ஒரு ஆறுதல்னா..எப்படியும் 3 இல்ல 4 இடம் தான் வருவோம்னு அவங்களுக்கே நல்ல தெரியும் அதனால பெருசா ஒன்னும் எதிர்பாகல அவங்க. ஆனா காங்கிரச விட ஒரு செஅட் ஆவது கூட வாங்கனும்னு துடிக்கிறாங்க. அப்போத்தான் 2014 தேர்தல்ல கூட்டணி போட
கட்சிகள் வரும். பாப்போம் இவங்க கதை என்ன ஆகுதுன்னு.
பி.எஸ்.பி:
பஹுஜன் சமாஜ், இதான் இப்போ அங்க ஆளுங்கட்சி. மாயாவதி தான் முதல்வர். அசுர பலத்தோட இந்த தேர்தல சந்திகிறாங்க. அரசாங்க பலம், பண பலம் எல்லாம் இவங்க கிட்ட இருக்கு.ஆனா மக்கள் பலம்??? தலித் மக்கள் ஓட்ட வெச்சு கரை சேர்ந்துரலாம்னு பாக்குறாங்க. சாகபோற நேரத்துல சங்கர சங்கராங்கர மாதிரி, கட்ட கடைசில ஒரு 3 மந்திரிங்கள கட்சிய விட்டு நீக்கினாங்க. ஊழலுக்கு எதிரான நடவடிக்கயாமா. சிரிப்பு வரல??மாநிலத்தையே 4 பிரிக்கணும்னு அடுத்த குண்டு போட்டாங்க. ஆனா இதுக்கு அவ்வளவா ஆதரவு இல்ல.தன்னோட சிலை தன்னோட கட்சி சின்னம் (யானை) சிலை வெச்சத தவிர சொல்றமாதிரி ஒன்னும் பண்ணல. இந்த முறை மாயா அக்கா ஜெயிகலன்னா அவங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்.
எஸ்.பி
சமாஜ்வாடி பார்ட்டி, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச முலாயம் சிங் யாதவ் தான் தலைவர், இவரோட மகன் அகிலேஷ் குமார் யாதவ் தான் அங்க அப்பாவ ஜெயிக்க வைக்க களமிறங்கி இருக்கார். அங்க நடந்த பிரசாரத்துல ராகுல் காந்திக்கும் இவருக்கம் நடந்த போட்டா போட்டி தான் செம சுவாரசியம். ராகுல் காந்திய செம ஓட்டு ஒட்டி கைதட்டல் வாங்கினார். அவருக்கு நிகரா சூறாவளி பிரசாரம் பண்ணார். அப்பவ ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கசொல்லிட்டு கட்சிய தானே வழிநடத்தினார். அதுல ஜெயிச்சாத்தான் இவருக்கு அரசியல் எதிர்காலம். ஜெயிப்பாரா???
-சிடிசன் :-)

அரசியல்,
உத்தரபிரதேசம்,
தேர்தல்,
மக்களவை தேர்தல்,
ராகுல் காந்தி
Monday, March 05, 2012
Thursday, January 14, 2010
ஆயிரத்தில் ஒருவன்....விமர்சனம்
செல்வராகவன் இயக்கத்தில் மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்து இன்று வெளிவந்திருக்கும் படம். இந்த மூன்று வருடங்களாக நான் ரொம்ப எதிர்பாத்தேன்...பாட்டு எல்லாம் கேட்ட பின்னாடியும் செம எதிர்பார்ப்பு இருந்தது....இன்னிக்கு காலேல பெங்களூர் இன்னோவேடிவ்ல பாத்தாச்சு....
எப்போ தமிழ்ல வரும் இது மாதிரி படம்னு கேபிள் சங்கர் கேட்ட கேள்விக்கு பதில்தான் இந்த படம். இந்த மாதிரி ஒரு "Fantacy Adventure" படத்த 35 கோடி பட்ஜெட்ல எடுக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்...ஆனா செல்வா இங்க இருக்குற வசதிகளை வெச்சு ஒரு அட்டகாசமான படம் கொடுத்திருக்கார்....இப்படி ஒரு கதையை யோசிச்சதுக்கே அவருக்கு ஒரு அவார்ட் குடுக்கணும்...
இந்த படத்துல மொத்தம் மூணு விஷயம் இருக்கு...
1. செல்வாவோட திரைக்கதை: ஆரம்பத்தில் எங்கயோ ஆரம்பிக்கிற படம் interval போது வேற ஏதோ ஒரு உலகத்துக்கு போகுது...சத்தியமா செல்வாவோட உழைப்பும, அவர் பண்ண ஹோம் வொர்க்கும் படம் முழுக்க தெரியுது...
2. ஒளிப்பதிவு,படத்தொகுப்பு அப்புறம் கலை...இந்த மூணு பார்ட்டும் ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க...
3: ரீமா, பார்த்திபன் அண்ட் கார்த்தி....நடிப்புல ரீமா சும்மா பட்டாசு கிளப்பிருக்காங்க...முதல் பாதில அவங்க துப்பாக்கி சுடும் ஸ்டைலும் அந்த அலட்சியமான லுக்கும்..வாவ் அட்டகாசம்..அப்புறம் பார்த்திபன் இவர் இரண்டாம் பாதிலதான் வரார்...லேட்ட வந்தாலும் அதகளம் பண்றார்..கார்த்தி முதல் பாதில கலக்கிருந்தாலும், இரண்டாம் பாதில அவங்க ரெண்டு பேர் முன்னாடி எடுபடல...
ஆண்ட்ரியா அவங்க தான் பாவம்...ரொம்ப ஒன்னும் வேலை இல்ல...:( அவங்க பாடின "ஒரு மாலை நேரம்" பாட்டும் படதுதுல காணோம்... :((.
அப்புறம் இந்த படத்துல துநிசு செல்வா சில விஷயங்கள் பண்ணிருக்காரு...அது எல்லாம் வெட்டுலேந்து எப்படி தப்பிசுசுன்னு தெரியல...ஆனா அந்த காட்சிகள் எல்லாம் கண்டிப்பா தேவை...
மொத்ததுல "ஆயிரத்தில் ஒருவன்"...தமிழ் திரையுலகை பெருமைப்படுத்துபவன் :)
எல்லாரும் தியேட்டர்ல போய் இந்த படத்த பாருங்க...மிஸ் பண்ண கூடாத ஒரு படம் இது.
Thursday, December 31, 2009
பத்து வருடங்கள் (2000-2009)
2005: முதல் ஒரு மாசம் வீட்டுல தான்...அப்புறம் பெங்களூர் பயணம்..என்னோட cousin வீட்டுக்கு...ஜாவா கிளாஸ் சேர்ந்து ஒரு 6 மாசம் நல்லா வீட்டு சாப்பாடு தூக்கம் ன்னு ஒரு ராஜ வாழ்கை...தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பாரபட்சம் பாக்காம resume அனுப்பி வெச்சதுல திடீர்னு CSS la வேலை கெடச்சுது...படிச்சது??((சரி சரி) எலெக்ட்ரிகல் ஆனா பார்த்த வேலை online Advertising...
2006: இந்த வருஷம் முழுக்க செம ஜாலி...புது ஆபீஸ் செட் ஆகி நிறையா friends அப்புறம் மறுபடியும் ரூம் வாழ்க்கைன்னு செம ஜாலியான வாழ்க்கை...என்னோட future online advertising லதான்னு முடிவு பண்ணின வருஷம்...அதபத்தி நிறைய கத்துக்கனும்னு முடிவு பண்ணின வருஷம்...
2007: இந்த வருஷமும் வழக்கம் போல ஜாலியாதான் போச்சு...திரும்ப லைப் பத்தி கொஞ்சம் பயம் வந்தது...நம்ம சம்பளம் எதுவும் மிச்சமாக மாட்டேங்குதேன்னு......மித்தபடி ஒன்னும் குறைவில்லாம போச்சு....
2008: இந்த வருஷ ஆரம்பத்துல என்னோட நெருங்கிய நண்பர்கள் வேற நல்ல வேலை கிடைச்சு போனாங்க...கொஞ்ச நாள் ரொம்ப கஷ்டமா இருந்தது...நானும் வெளியில ட்ரை பண்ணினேன்...அப்படி திடீர்ன்னு என்னோட நண்பர்கள் மூலமா Yahoo Mumbai ல வேலை கிடைச்சுச்சு.செம சந்தோஷமா இருந்தது...மும்பை வாழ்க்கை Yahoo ல வேலை ன்னு ஒரு கெத்தா இருந்தது...வருஷ கடைசில மும்பைல 26/11....ரொம்பவே பயந்து போயிட்டேன் அப்போ...
2009: இந்த வருஷம் ஆரம்பம் மும்பைல இருந்தேன் ...மறக்கவே முடியாத மும்பை வாழ்க்கை..ராஜ வாழ்க்கை .....என் அத்தை வீட்டுல தான் தங்கி இருந்தேன்....மும்பை போனா எல்லாரும் மிஸ் பண்றது நம்ம சாப்பாடு..அது எனக்கு நல்லா கெடச்சுது....:))) செம friends....மும்பையும் அதன் சுத்து வட்டாரத்துல இருக்குற எல்லா இடமும் அத்துப்படி...ஆனா வேலை கொஞ்சம் கடுபடிசுது இந்த வருஷத்துல...அப்புறம் ஊருக்கு வந்துட்டு போறதும் பெரிய சிக்கலா இருந்தது...சரின்னு திரும்ப வேலை தேடும் படலம் ஆரம்பிச்சது...கடைசியா மறுபடியும் வந்தது பெங்களூர்....இப்போ AOL....முன்னைவிட செம சந்தோஷம்...முக்கால்வாசி பேர் என்கூட சென்னைல வேலை பார்த்தவங்கதான்...இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு....
இப்படி இந்த 10 வருஷம் நானே நினைக்காத பல விஷயங்களை தந்துருக்கு.....அடுத்த 10 வருஷம் இத விட முக்கியமா இருக்கும்...வாழ்கைல செட்டில் ஆகறது. ...தங்கை கல்யாணம்...என் கல்யாணம் ன்னு நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு...ஆண்டவன் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கணும்...அதுக்கு வேண்டிக்கொண்டு...அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லி விடைபெறுகிறேன்...நன்றி!!! வணக்கம். :)
Wednesday, September 23, 2009
கமலுக்கும் போக்கிரி வடிவேலுக்கும் உள்ள ஒற்றுமை
Friday, August 21, 2009
விநாயகர் சதுர்த்தி---ஸ்பெஷல் ஜோக்
ஒரு பெரிய கப்பல்ல நெறைய பேரு ஒரு பயணம் போனாங்க...அப்ப நடுக்கடல்ல அந்த கப்பல் கோளாறு ஆகிருச்சு....எல்லாரும் தப்பிக்க என்னனமோ பண்றாங்க ஆனா முடியல...கப்பலும் கொஞ்சம் கொஞ்சமா மூழ்கிட்டு வருது...ஒடனே அல்லாரும் நம்ம பிள்ளையார வேண்டுறாங்க...
விநாயகா...வினை தீர்ப்பவனே நு பயங்கரமா அழுதுகிட்டே பாடுறாங்க...இவங்க வேண்டினதாலயோ இல்ல இவங்க பாட்ட கேட்டு மெர்சலாயோ நம்ம பிள்ளையார் வராரு....
ஒடனே எல்லாரும் அப்பா விநாயகா எங்கள காப்பாத்துப்பா ன்னு கதற்ராங்க ..ஒடனே கொஞ்சம் யோசிச்ச பிள்ளையார் என்ன பண்ணாருன்னா.............
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
இப்படி கெட்டபெல்லாம் மாத்தி செம ஆட்டம் போட்டாரு பிள்ளையார் கரைலேந்து....
இத பாத்து கொஞ்சம் கடுப்பும் கொஞ்சம் பயமுமா எல்லாரும் பிள்ளையார் கிட்ட ...என்ன பிள்ளையாரே எங்கள காப்பாத்தாம இப்படி டான்ஸ் ஆடுறியே இது நியாயமான்னு கேட்டாங்க.
அதுக்கு பிள்ளையார்
"ஏன்டா வெண்ணைங்களா நான் ஒரு நாள் இப்படி அடுறதுக்கே இப்படி பீல் பண்றீங்களே என்னைய வருஷா வருஷம் கடல்ல தூக்கிபோட்டு என்னமா ஆடுனீங்க அப்பா எனக்கு எப்படி இருக்கும்"....இந்தா இன்னும் கொஞ்சம் பாருன்னு போட்டாராம் செம டான்ஸ்...
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.....:))))))))))))

Subscribe to:
Posts (Atom)