Tuesday, September 09, 2008

ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்!!!!!பருத்திவீரன் பாடல் பாணியில் ஒரு குத்து பாட்டு!!!!!

நன்றி : இந்த பாடலை எழுதியவர் க்கு....

என் இனிய தமிழ் மக்களே....
உங்களுக்கு
 ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான்இந்த வாரதிராஜா...

நீங்கள்
 கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம்,


இந்த
 படைபிற்க்காக
சுட்டது
: பருத்தி வீரன் பாடலை
சுடாதது
: அந்த பாடல் வரிகளை

Start Mizik...

Team members:

ஊரோரம்
 IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
ஊரோரம்
 IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
நான்பிறந்த
 சென்னையில ஆளுக்காளு programmera
நான்பிறந்த
 சென்னையில ஆளுக்காளு programmera

Team members:

கூடுனுமே
 கூடுனுமே codeஅடிக்க மாடு போல
கூடுனுமே
 கூடுனுமே codeஅடிக்க மாடு போல
மாட்டுனமே
 மாட்டுனமே நார-PM கையிமேல
மாட்டுனமே
 மாட்டுனமே நார-PM கையிமேல

PM:

நிறுத்துங்கடி
,  நிறுத்துங்கடி, நிறுத்துங்கிறேன்ல Codeஅடிங்கடின்னா என்னா நக்கலா
ஏய்
 Fresher நீ இங்க வா, டேய் associate நீ இங்க வா, எல்லாம் வரிசையா நில்லு
நல்லா
 keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன


Team meber:

யோவ்
 இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு delivery கிடையாதுஆமா

PM:

இங்க
 பார்யா கோவத்த, டேய் TL அட்ரா

TL:

நாடரிஜ்ச
 fresherகளா நீங்க எங்க சோடி,
உங்கள
 வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி
C plus plus code
 அடிக்கும் சின்ன பைங்கிளி
C plus plus code
 அடிக்கும் சின்ன பைங்கிளி
ஓன்ன
 quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா
ஓன்ன
 quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா


PM:
Codenna
 இப்படிதான் குத்தனும், என்ன புரிஞ்சுதா

Programmer:
Design correct
ல்லாத ப்ரொஜெக்ட்குள்ள,
இப்போரவுசு
 பன்னும் PM தம்பி
நைட்டெல்லாம்
 codeaa குத்தி,
எனக்கு
 கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா,
கைய்யி
 ரெண்டும் வலிக்கிதுடா


PM:

அட
, ராவெல்லாம் codeaa குத்தி,
உனக்கு
 கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
இந்த
 experienceஉல்ல PMகிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடி

Programmer:
experience
உள்ள PMகிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசங்கு
 பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா,
நீயும்
 அறிவுகெட்டு பேசாதடா


Tester:

அடி
 bodyமேல bodyவச்சி bodyக்குள்ள HTLML codeவச்சி

TL:

அட
, அப்படி போடு SAppu (Senior Associate )


Tester:

ஓட்டி
 ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடா

அஹா
 அஹா அஹா....
ஓட்ட
 Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser
ஓட்ட
 Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser


Test Lead:

அட
 இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா
ஆமா
 ஆமா ஆமோய்....

பொசகெட்ட
 பயேல ஒனக்கு test director கேக்குதடா

Test Manager:
QC
ஈல (QC = Quality Centre)...
ஆமோய்
 ஆமோய் ஆமோய்...
QC
ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி..
QC
ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
நான்
 test planaai போட்டு வச்சென் MPPயில (MPP = Microsoft Project plan)
நான்
 test planaai போட்டு வச்சென் MPPயில

ஆனா
 milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல
ஆனா
 milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல

Designer:
Risk
குள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
Risk
குள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
சப்பையான
 design changeuக்கு changeaa விடாம
சப்பையான
 design changeuக்கு changeaa விடாம
ஓங்கள
 அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
ஓங்கள
 அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க

TL:

அடி
 யாயி... ஆஹா ஆஹா ஆஹா

ELT: (Entry Level Trainee)

அள்ளி
 MPPயில estimateaa தூக்கி பொட்டு
அள்ளி
 MPPயில estimateaa தூக்கி பொட்டு
புள்ளி
 மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
புள்ளி
 மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
இப்பொ
 புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியல

PM:

போடா
 போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா
போடா
 பொடிப்பயலே design தெரியா மடப்பயலே
ELT batch
 சின்ன பய என்னென்னமோ பேசுரானே
designerkku
 எனக்கும் சண்டை, இப்போ உடைய போகுது மண்டை
அட
 designerkku எனக்கும் சண்டை, இப்போ உடையப்போகுது மண்டை

PM & TL:
 என்ன fresherங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டுநிக்கறீங்க, codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா.

இதை எனக்கு மெயிலில் அனுப்பியது நண்பர் வெங்கடேஷ். அவருக்கு என் நன்றிகள்

Friday, September 05, 2008

Online Advertising ஒரு எளிய அறிமுகம் 1


Online advertising என்பது ஒரு பணம் கொழிக்கும் துறை. பணம் என்றால் கோடிகளில்.
நான் இந்த துறையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இருப்பதால் எனக்கு தெரிந்த வரையில் இதை பற்றி விளக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

நான் இந்த துறைக்கு வந்ததே ஒரு விபத்துதான்!!! என்னடா எல்லா சினிமா மக்கள் மாதிரி சொல்றானேன்னு நினைக்காதீங்க. சத்தியமா நான் வேலைக்கு சேரும் வரை இதை பற்றி ஒன்றுமே தெ
ரியாது. அவ்வளவு ஏன் இதை பற்றி நான் கேள்விபட்டதுகூட இல்லை.இந்த துறையில் சேர்ந்தவுடன் தான் இதன் வீ
ரியமும் இதன் மார்கெட் வால்யுவும் புரிந்தது!!!

எப்படி ஒரு பத்திரிக்கை, தொலைக்காட்சி சானல் நடத்த விளம்பர வருவாய் முக்கியமோ அவ்வளவு மிக்கியம் ஒரு இணையதளம் நடத்துவதற்கும். இதில் வரும் வருமானத்தை கொண்டு தான் மற்ற செலவுகளை அது செய்யும்.
எடுத்துகாட்டாக ஒரு நாளிதழில் முதல் பக்கம் விளம்பரம் செய்ய வேண்டுமானால் நிறைய செலவாகும், அதேபோல் T.V யில் Prime Time வரும் விளம்பரங்கள் அதிக விலை போகும். ஏன் அதற்கு மட்டும் அவ்வளவு விலை?
உங்களுக்கே விடை தெரியும் " முதல் பக்கத்தில் வரும் விளம்பரமும், prime time மில் வரும் விளம்பரத்திற்கும் அதிக பார்வையாளர்க
ள் கிடைப்பார்கள்".
இதே தான் இணையதளத்திற்கும். 
இவர்கள் தங்களின் Homepage ஐ பல slot களாக டிசைன் செய்து ஒவ்வொரு ஸ்லாட்டும் ஒவ்வொரு விலையில் விற்பார்கள். இந்த விலை அந்த இணையத்தளத்தின் மற்ற பக்கங்களின் விலையை விட அதிகமாக இருக்கும்.

ஆனால் இதுவும் நேரத்துக்கேற்ப மாறும். இப்போது ஒரு கிரிகெட் மேட்ச் நடக்கிறது என்று வைத்துகொள்வோம் அந்த நேரத்தில் முக்கால்வாசி மக்கள் அந்த இணையத்தின் விளையாட்டு பக்கத்திற்கு தான் செல்வார்கள் எனவே விளையாட்டு பக்கத்திற்கு அன்று மவுசு அதிகமாக இருக்கும்.
கீழே இருக்கும் Screenshot பார்த்தால் உங்களுக்கு புரியு
ம் இங்கே நான் சிகப்பு கட்டம் கட்டி இருப்பதுதான் விளம்பரம்.


வரும் பதிவுகளில் எப்படி இந்த விளம்பரங்கள் வருகின்றன அதன் தொழில்நுட்பம் என்ன என்பன பற்றி பார்போம்!!!!!

தங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் :))))

Tuesday, September 02, 2008

என் மும்பை வாழ்க்கை!!!!


இன்றுடன் மும்பை மாநகருக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது!!!!!




சென்னையில் ஒரு சின்ன கம்பெனியில் போட்டி தட்டி கொண்டிருந்த நான் இப்போது மும்பையில் ஒரு பெரிய பன்னர்வ கம்பெனியில்...
என் பழைய கம்பெனியில் அமெரிக்க மேரத்தில் வேலை செய்தாலும், இது மிகவும் பெரிய கம்பெனி என்பதாலும் எவ்வித தயக்கமும் இல்லாமல் மும்பை வந்துவிட்டேன்.

நான் வந்தது ஜூலை மாதம் மும்பையில் மழை மிக அதிகம் இருக்கும் என்று சொன்னார்கள்.அதைபோலவே என் பிளைட்டும் மழை காரணமாக 3 மணிநேரம் தாமதம்.என்னடா இது என்று நொந்து நூடுல்ஸ் ஆகி என் அத்தை வீட்டிற்கு வந்தேன்.இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா நான் சென்னையில் என் நண்பர்களோடு தான் தங்கியிருந்தேன் ஆனால் மும்பையில் என் அதை வீட்டில் தான் தங்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு.

அடுத்த நாளே இங்கு வேலையில் சேரவேண்டும். காலையில் ஒரு டாக்ஸி பிடித்து (அத்தையின் துணையுடன் தான்) அலுவலகம் வந்து சேர்ந்தால் நானும் செச்குரிடியும் தான் வந்துருக்கோம். அப்போ மணி 9:30. என்னடா இது யாரையும் காணோம்னு பார்த்தால் ஆடி அசஞ்சு 10:30 மணிக்கு மேலதான் வராங்க எல்லாம்.
எனக்கு செம குஷி.ஆகா இதுவல்லவோ கம்பெனி னு. எனக்கான ஆப்பு இருந்தது என் கண்ணுக்கு அப்போ தெரியல...

சரி மும்பைய பத்தி எழுத வந்துட்டு எங்கயோ போயிட்டேன் ஸாரி!!!!!!!!
அலுவலகம் வந்ததும் என் கண்ணுல பட்டது என்ன தெரியுமா?


அடுத்த பதிவுல சொல்றேன்!!!!! :)))))))

Thursday, August 14, 2008

ஒரு பயனுள்ள தளம்!!!!!!!

ரொம்ப நாள் கழிச்சு ஏதாவது எழுதலாம்னு பார்த்தேன்....என்ன எழுதறதுனு யோசிச்சா ஒன்னுமே தோணலை. அப்பதான் என் நண்பன் கார்த்திகேயன் மூலமா எனக்கு இந்த லிங்க் கிடைச்சுது....

நம்ம தமிழக கல்வித்துறை ரொம்ப நல்ல காரியம் பண்ணிருக்காங்க...ஆனா இதபத்தி எத்தன பேருக்கு தெரியும்?

இந்த தளத்தில் எல்லா பாடபுத்தகங்களும் pdf வடிவில் இருக்கு.நான் இப்போது 12 வகுப்பு தமிழ், வரலாறு மற்றும் ஆங்கில பாடத்தை தரவிறக்கம் செய்தேன்...:)))

படிக்கிற காலத்துல தான் படிக்கல..... இப்போயாவது படிப்போம்....

Wednesday, January 02, 2008

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!இந்த புத்தாண்டில் நம் நாடு சகல செழிப்பும் பெற்று வளமாக இருக்க ஆண்டவனை வேண்டுவோம்!!!!!

Tuesday, December 25, 2007

மாவீரன் நரேந்திர மோடி!!!!!!!!!



நாடே எதிர்ப்பார்த்த குஜராத் மாநில தேர்தல் முடிந்து நாட்டில் உள்ள அனைத்து மீடியா மற்றும் எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படும் நரேந்திர மோடி மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்றார்.


ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று குஜராத்தின் மன்னராக வலம்வரும் மாவீரன் மோடிக்கு என் வந்தனம்!!!


கடந்த 6 வருடங்களில் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 3% அதிகரித்து உள்ளது. இது இந்தியாவின் எந்த மாநில முதல்வரும் தன் மாநிலத்தை இந்த அளவு உயர்த்தியதில்லை. தற்பொழுது குஜராத்தின் மொத்த வளர்ச்சி விகிதம் 11.5 சதவிகிதம்.


இவ்வளவு செய்துள்ள ஒரு முதல்வரை எதிர்க்க காங்கரஸ் மற்றும் சில அறிவுஜீவி பத்திரிகைகாரர்களுக்கு வேறு எந்த விஷயமும் இல்லாத காரணத்தால் "புளித்து போன" இந்துத்த்வா கோஷத்தை கையிலெடுத்தார்கள். ஆனால் குஜராத் மக்கள் மிகவும் புத்திசாலிகள் தங்கள் மாநில வளர்ச்சிக்கு யார் காரணம் மற்றும் யார் வந்தால் இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெரும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவெடுத்துள்ளார்கள்.


இனியாவது காங்கரஸ், கம்யுனிஸ்ட்கள் எல்லாம் மோடியை கரித்து கொட்டிகொண்டே இருக்காமல் அவரிடம் நிர்வாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.முதல்வன் படத்தில் சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார் " அடுத்தவன எப்படி கவுகரதுன்னு செலவழிக்கிற மூளைல ஒரு கால் பங்கு நாட்டுக்கு என்ன பண்ணலாம்னு செலவழிச்சா நம்ம நாடு என்னிக்கோ முன்னேரிருக்கும்"இந்த வசனம் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பொருந்தும்.


சரி இந்த தேர்தலில் மோடி தோற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?


1 . காங்கிரஸ் இது மதவாதிகளுக்கு குஜராத் மக்கள் அடித்த சாவுமணி என்று அறிக்கை விடுக்கும்.


2. கம்யுனிஸ்ட்களின் வெத்து மிரட்டலுக்கு அஞ்சாமல் தனகிருக்கும் செல்வாக்கை மனதில்கொண்டு செயல்பட்டிருக்கும்.


3. ராகுல்காந்தி ஒரு சிறந்த தலைவராக வளர்ந்திருப்பார். அடுத்த மக்களவை தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுருக்கும்.


நாம் செய்த புண்ணியம், இந்த கொடுமைஎல்லாம் நடக்காமல் நம்மை காப்பாற்றிய குஜராத்திகளுக்கு நாம் நிச்சயம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!!!


அனைத்திலும் பெரிய காமெடி என்னன்னா அது ராகுல்காந்தி தான். பாவம் அவர் பிரசாரம் பண்ணிய உ.பி, குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் அடைந்தது படு தோல்வி!!!!! இது ராகுலின் பப்பு இனிமேல் வேகாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பாவம் ராகுலின் நிலைமை இப்போது சற்று கலவரம் தான்!!!

Friday, December 21, 2007

பில்லா - விமர்சனம்







சூப்பர் ஸ்டார் நடித்து 1979 ல் வெளிவந்து பெருவெற்றி பெற்ற "பில்லா" எனும் படம் இப்பொழுது அல்டிமேட் ஸ்டார் நடிப்பில் புதுப்பொலிவுடன் "பில்லா 2007" ஆக வெளிவந்துள்ளது. பூஜை போட்ட நாள் முதலே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பிய படம் இது. போன மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து அந்த எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கின. தல வேறு கலைஞர் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து தன் பங்கிற்கு திரி கொளுத்தி விட்டார். இவை எல்லாம் சேர்ந்து என்னை இப்படத்தை முதல் நாளே பார்க்க வைத்தது.


இனி விமர்சனம்!!!


படத்தின் கதை நமக்கெல்லாம் ஏற்கனவே நன்கு தெரிந்ததுதான். அதனால் நான் கதைக்குள் போகவில்லை. சூப்பர் ஸ்டார் ஏற்று நடித்த கதப்பாதிரத்தை ஏற்க மிகுந்த தைரியம் வேண்டும்.அது அஜித்திடம் நிறையவே இருக்கிறது. படம் முழுக்கவே அஜித்தின் அட்டகாசம் தான். அவர் கோட் சூட் போட்டு நடந்து வருவதாகட்டும் தலையை சாய்த்து பார்ப்பதாகட்டும் ஆகா ஆகா தல பிரிச்சு மேஞ்சிருக்கார்!!


பில்லாவை விட வேலு க்கு வேலை கம்மி தான், ஆனாலும் இந்த வேடத்தில் தல காமெடியும் நன்றாக செய்துள்ளார்..


அடுத்தது நம்ம நயன்தாரா!!!!! அவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. அழகை காட்டி சும்மா அதிரவைக்கிறார். அவரை பார்த்து என் நண்பன் சொன்னது " சிம்பு அநியாயத்துக்கு வேஸ்ட் பண்ணிடாண்டா" :)))நயன்தாரா முன் நமீதா "ஆயிரம் வாட்ஸ்" பல்பு முன் "0 வாட்ஸ்" பல்பு மாதிரி அமுங்கி போய்டாங்க.


பிரபு தன் வேலையை மிக சரியாக செய்துள்ளார், அதைப்போலவே ரகுமானும்.படம் முழுக்கவே இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. படத்தின் போக்கிற்கு மிகவும் உதவுவது "நீரவ் ஷா" வின் ஒளிப்பதிவும் "யுவனின்" பின்னணி இசையும்.அதிலும் அந்த கார் சேசிங் காட்சியில் இருவரும் கைதட்டல் பெறுகிறார்கள்.அடுத்ததாக உடை அலங்காரம் "அணு வர்தன்" அனைவருக்கும் மிக பொருத்தமாக உடைகளை வடிவமைத்துள்ளார்.


"பில்லா 2007" அஜித் விஷ்ணு வாழ்வில் ஒரு மைல்கல்!!!!!!! இதற்கு மேல் அழகாக வேகமாக இதுவரை எந்த படமும் வரவில்லை, வருங்காலத்தில் வந்தாலும் அதில் இப்படத்தின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.


பஞ்ச் : தில்லா வந்து நல்லா கல்லா கட்டும் "பில்லா"

Wednesday, November 28, 2007

ஒரு மின்னஞ்சல்(mail) படிக்க 1 ரூபாய் தராங்களாம்!!!!!

ஒரு மின்னஞ்சல்(mail) படிக்க 1 ரூபாய் தராங்களாம், இங்க கிளிக் பண்ணுங்க மேல் விவரங்கள் தெரியும்...நானும் இப்போதான் சேர்ந்துருக்கேன். சேர்றதுக்கு காசு எதுவும் இல்ல free தான்...நம்ம கணக்குல Rs.200 வந்தா செக் அனுப்பி வெப்பாங்கலாம்....பாப்போம்...

பி.கு: இதுல சேர்ந்து காசு எதுவும் வரலேன்னா என்ன கேக்காதீங்க!!!! அம்புடுதேன்!!!

Saturday, November 24, 2007

பொல்லாதவன் - விமர்சனம்



மத்த ரெண்டு தீபாவளி படங்களும் பாத்தாச்சுங்கரதுனால இந்த படம் பாக்கணும்னு ரெண்டு வாரமா நெனச்சு நேத்து எனக்கு ஆபீஸ்ல off குடுத்ததுனால காசி தியேட்டர் ல படம் பாக்க போயிட்டேன். இந்த படம் பத்தி எல்லாரும் நல்லவிதமா சொல்லி எழுதி இருந்ததும் ஒரு காரணம். நல்லவேளை நம்மள ஏமாத்தாம ஒரு படம் குடுத்துருக்கார் இயக்குனர் வெற்றிமாறன்!!! நல்ல முயற்சி!!!



இந்த படத்துல பைக் தன் ஹீரோ...ஆமா அத சுத்திதான் கதையே!!!இதுவே நமக்கு புதுசுதான்!!! ஹீரோ(தனுஷ்) வெட்டியா ஊரசுத்துறது பிடிக்காம ஒரு கட்டத்துல அவர் அப்பா ஒரு 70,000/- ரூபாய் குடுத்து பொழசுக்க சொல்றாரு. ஆனா தனுஷ் தன்னுடைய நீண்டநாள் ஆசையான ஒரு பைக் வாங்கறாரு. வீட்டுல திட்டுவிழ தனுஷ் அந்த பைக்க வெச்சே ஒரு வேல தேடிக்கறார். அதுக்கு அப்பறம் அவர் வாழ்க்கைல ஏகப்பட்ட நல்லவிஷயங்கள் நடக்குது. அவர் ஒருதலையா காதலிச்ச பொண்ணு அவர லவ் பண்றா, வீட்டுலயும் மரியாத கூடுது. இப்படி வாழ்க்கை சந்தோஷமா பொகும்போது அவரோட அந்த பைக் திருடு போய்டுது.அத கண்டுபுடிக்க போகும்போது என்னனென்ன பிரச்சனைகள் வருது அத அவர் எப்படி face பண்றார் இதான் படம்.



இப்படி ஒரு கதைய எடுத்து அத கொஞ்சம் கூட போர் அடிக்காம குடுத்ததுக்காகவே வெற்றிமாரனை எவ்வளவு வேணுமானாலும் பாராட்டலாம்.இந்த படத்தில் என்னை மிகவும் கவர்வது ரவுடி கூட்டத்தின் தலைவனாக வரும் "கிஷோர்" என்பவரின் பாத்திரமும் அவரின் மிக இயல்பான நடிப்பும். அவருக்கு இதுதான் முதல் படமா இல்லை வேறு மொழிகளில் ஏதாவது நடித்துருக்கிரரானு தெரியல. யாரவது தெரிஞ்சா சொல்லுங்க. அப்பறம் தனுஷ், அவரு அலட்டிக்காம அசால்டா நடிச்சுருக்காரு. அதுலயும் அந்த மருத்துவமனை காட்சி, தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் வளர்கிறார் என்று காட்டுகிறது.

அடடா இவ்ளோ நேரம் படத்தபத்தி பேசிட்டு ஹீரோயின் பத்தி பேசவே இல்லையே. இந்த படத்தோட ஹீரோயின் "திவ்யா" அதாங்க "குத்து" படத்துல நடிச்சாங்களே அந்த "ரம்யா" தான். இந்த படத்துல அவங்க அவ்ளோ அழகு......அதுவும் அவங்க சிரிப்பு இருக்கே வாவ் சோ க்யூட்!!!!!!! இவங்க அடுத்த படம் "வாரணம் ஆயிரம்" எப்படா வரும்னு காத்திருக்கேன்..


அப்பறம் டேனியல் பாலாஜி, அவருக்கு யாராவது வேறு ஒரு ரோல் குடுங்கப்பா??அவர் அண்ணியாக வருவது "அஞ்சு"வாம் "ஆயிரத்து அஞ்சு" மாதிரி இருக்கிறார்.


எடிட்டிங் v.t.விஜயன், அவருடைய அனுபவம் இந்த படத்துக்கு ரொம்ப உதவிருக்கு. அப்பறம் இசை, நம்ம இணைய புகழ் yogi.b யோட "எங்கேயும் எப்போதும்" ரீமிக்ஸ் பாட்டுக்கு தியேட்டரே ஆடுது, அப்பறம் தினாவோட ஓபனிங் குத்துபாட்டும் நல்லா தாளம் போட வெச்சுருக்கு, ஆனாலும் g.v.பிரகாஷ் ஓட "மின்னல்கள் கூத்தாடும்" பாட்டும் அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். கார்த்திக் - பாம்பே ஜெயஸ்ரீ குரல் மிக அருமை.சண்டைகாட்சிகளும் இயல்பாக இருக்கிறது.



"அழகிய தமிழ் மகன்" பார்த்து மண்டை காஞ்சு போனவர்கள் இந்த படம் தாராளமாக போகலாம்...கண்டிப்பாக ஏமாற்றாது!!!

Monday, November 19, 2007

கமெண்ட் போடுங்கள் ப்ளீஸ்!!!!!




முகம் தெரிந்த/தெரியாத சில நண்பர்கள் என் பதிவுகளை படிக்கிறீர்கள் என்பதை என் பதிவின் ஹிட் கௌன்டின் மூலம் அறியமுடிகிறது. அவர்களுக்கு என் நன்றிகள் பல.அப்படி படிக்கும் போது அதில் உள்ள நிறை குறைகளை "கமெண்ட்" வாயிலாக தெரியபடுத்தினால் மிக்க உதவியாக இருக்கும்.தங்களது வலைபூவினை நான் பார்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.எனக்கும் என் பதிவை இவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்ற சந்தோஷம் ஏற்படும்!!! அதனால் நண்பர்களே தயவு செய்து கமெண்ட் எழுதுங்க!!!!!