Friday, December 21, 2007

பில்லா - விமர்சனம்







சூப்பர் ஸ்டார் நடித்து 1979 ல் வெளிவந்து பெருவெற்றி பெற்ற "பில்லா" எனும் படம் இப்பொழுது அல்டிமேட் ஸ்டார் நடிப்பில் புதுப்பொலிவுடன் "பில்லா 2007" ஆக வெளிவந்துள்ளது. பூஜை போட்ட நாள் முதலே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பிய படம் இது. போன மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து அந்த எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கின. தல வேறு கலைஞர் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து தன் பங்கிற்கு திரி கொளுத்தி விட்டார். இவை எல்லாம் சேர்ந்து என்னை இப்படத்தை முதல் நாளே பார்க்க வைத்தது.


இனி விமர்சனம்!!!


படத்தின் கதை நமக்கெல்லாம் ஏற்கனவே நன்கு தெரிந்ததுதான். அதனால் நான் கதைக்குள் போகவில்லை. சூப்பர் ஸ்டார் ஏற்று நடித்த கதப்பாதிரத்தை ஏற்க மிகுந்த தைரியம் வேண்டும்.அது அஜித்திடம் நிறையவே இருக்கிறது. படம் முழுக்கவே அஜித்தின் அட்டகாசம் தான். அவர் கோட் சூட் போட்டு நடந்து வருவதாகட்டும் தலையை சாய்த்து பார்ப்பதாகட்டும் ஆகா ஆகா தல பிரிச்சு மேஞ்சிருக்கார்!!


பில்லாவை விட வேலு க்கு வேலை கம்மி தான், ஆனாலும் இந்த வேடத்தில் தல காமெடியும் நன்றாக செய்துள்ளார்..


அடுத்தது நம்ம நயன்தாரா!!!!! அவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. அழகை காட்டி சும்மா அதிரவைக்கிறார். அவரை பார்த்து என் நண்பன் சொன்னது " சிம்பு அநியாயத்துக்கு வேஸ்ட் பண்ணிடாண்டா" :)))நயன்தாரா முன் நமீதா "ஆயிரம் வாட்ஸ்" பல்பு முன் "0 வாட்ஸ்" பல்பு மாதிரி அமுங்கி போய்டாங்க.


பிரபு தன் வேலையை மிக சரியாக செய்துள்ளார், அதைப்போலவே ரகுமானும்.படம் முழுக்கவே இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. படத்தின் போக்கிற்கு மிகவும் உதவுவது "நீரவ் ஷா" வின் ஒளிப்பதிவும் "யுவனின்" பின்னணி இசையும்.அதிலும் அந்த கார் சேசிங் காட்சியில் இருவரும் கைதட்டல் பெறுகிறார்கள்.அடுத்ததாக உடை அலங்காரம் "அணு வர்தன்" அனைவருக்கும் மிக பொருத்தமாக உடைகளை வடிவமைத்துள்ளார்.


"பில்லா 2007" அஜித் விஷ்ணு வாழ்வில் ஒரு மைல்கல்!!!!!!! இதற்கு மேல் அழகாக வேகமாக இதுவரை எந்த படமும் வரவில்லை, வருங்காலத்தில் வந்தாலும் அதில் இப்படத்தின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.


பஞ்ச் : தில்லா வந்து நல்லா கல்லா கட்டும் "பில்லா"