Thursday, December 31, 2009

பத்து வருடங்கள் (2000-2009)


இந்த பத்து வருடங்கள் என் வாழ்க்கைல ரொம்ப ரொம்ப முக்கியமானது...அதைப்பற்றி இப்போ கொஞ்சம் பார்க்கலாம்

2000: இது ரொம்ப முக்கியமான வருஷம்..ஏன்னா இந்த வருஷத்துல தான் நான் +2 முடிச்சேன்...ஓகோன்னு இல்லாட்டியும் ஓரளவு நல்ல மார்க் தான் வாங்கினேன்...என்ன அந்த entrance exam தான் கொஞ்சம் கவுத்திருச்சு(கொஞ்சமாடா கவுத்திச்சு)...அப்புறம் ஏகப்பட்ட கனவுகளோட காலேஜ் வாழ்க்கை ஆரம்பம்.

2001: காலேஜ்ல என்னோட first crush (ச்சூ..அதான் first ஆன்னு எல்லாம் கேக்கப்படாது)..ஆரம்பம் நல்லா இருந்து பினிஷிங் சரி இல்லாம போச்சு....காலேஜ் பக்கத்துல ரூம் எடுத்து தங்கினது நிறைய friends அறிமுகமானது ன்னு இந்த வருஷம் செம சூப்பர்...

2002: காலேஜ்ல இப்போ நாங்க சீனியர்...ஆனா ராக்கிங் பண்ணமுடியாம நொந்து பொய் இருந்தோம்...இந்த வருஷம் தான் EEE Group செட் ஆச்சு....
மறக்கவே முடியாத gang அது....

2003: செம ஆட்டம் இந்த வருஷம் தான் எங்க ரூம்லயும் சரி காலேஜ்லயும் சரி...கெட்ட ஆட்டம் போட்டோம் ..போதாகுறைக்கு இந்த வருஷம் cricket world cup வேற....எங்க ரூம்ல tv இருந்ததால பாதி காலேஜே ரூம்லதான் இருக்கும்..அதுவும் நம்ம ஆட்கள் பட்டய களப்பினாங்க....படிப்பு? அது பாட்டுக்கு ஒரு ஓரமா போச்சு....

2004: இந்த வருஷம் ஆரம்பிச்ச உடனேயே பயமும் ஆரம்பிச்சுருச்சு....படிப்பு இன்னும் 3 மாசத்துல முடிஞ்சுரும் அப்புறம் என்ன பண்ண போறோம்னு ஒரு பயம்....கையில ஒரு வேலையும் இல்லாம படிப்ப முடிச்சுட்டு வீட்டுக்கு போட்டி கட்டியாச்சு....நல்லா ஒரு 6 மாசம் ரெஸ்ட்...அப்புறம் இந்த வருஷத்துல சுனாமி வேற :((..நான் அப்பா அந்த சமயத்துல சென்னைல இருந்தேன்..ரொம்ப கஷ்டமா இருந்தது...

2005: முதல் ஒரு மாசம் வீட்டுல தான்...அப்புறம் பெங்களூர் பயணம்..என்னோட cousin வீட்டுக்கு...ஜாவா கிளாஸ் சேர்ந்து ஒரு 6 மாசம் நல்லா வீட்டு சாப்பாடு தூக்கம் ன்னு ஒரு ராஜ வாழ்கை...தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பாரபட்சம் பாக்காம resume அனுப்பி வெச்சதுல திடீர்னு CSS la வேலை கெடச்சுது...படிச்சது??((சரி சரி) எலெக்ட்ரிகல் ஆனா பார்த்த வேலை online Advertising...

2006: இந்த வருஷம் முழுக்க செம ஜாலி...புது ஆபீஸ் செட் ஆகி நிறையா friends அப்புறம் மறுபடியும் ரூம் வாழ்க்கைன்னு செம ஜாலியான வாழ்க்கை...என்னோட future online advertising லதான்னு முடிவு பண்ணின வருஷம்...அதபத்தி நிறைய கத்துக்கனும்னு முடிவு பண்ணின வருஷம்...

2007: இந்த வருஷமும் வழக்கம் போல ஜாலியாதான் போச்சு...திரும்ப லைப் பத்தி கொஞ்சம் பயம் வந்தது...நம்ம சம்பளம் எதுவும் மிச்சமாக மாட்டேங்குதேன்னு......மித்தபடி ஒன்னும் குறைவில்லாம போச்சு....

2008: இந்த வருஷ ஆரம்பத்துல என்னோட நெருங்கிய நண்பர்கள் வேற நல்ல வேலை கிடைச்சு போனாங்க...கொஞ்ச நாள் ரொம்ப கஷ்டமா இருந்தது...நானும் வெளியில ட்ரை பண்ணினேன்...அப்படி திடீர்ன்னு என்னோட நண்பர்கள் மூலமா Yahoo Mumbai ல வேலை கிடைச்சுச்சு.செம சந்தோஷமா இருந்தது...மும்பை வாழ்க்கை Yahoo ல வேலை ன்னு ஒரு கெத்தா இருந்தது...வருஷ கடைசில மும்பைல 26/11....ரொம்பவே பயந்து போயிட்டேன் அப்போ...

2009: இந்த வருஷம் ஆரம்பம் மும்பைல இருந்தேன் ...மறக்கவே முடியாத மும்பை வாழ்க்கை..ராஜ வாழ்க்கை .....என் அத்தை வீட்டுல தான் தங்கி இருந்தேன்....மும்பை போனா எல்லாரும் மிஸ் பண்றது நம்ம சாப்பாடு..அது எனக்கு நல்லா கெடச்சுது....:))) செம friends....மும்பையும் அதன் சுத்து வட்டாரத்துல இருக்குற எல்லா இடமும் அத்துப்படி...ஆனா வேலை கொஞ்சம் கடுபடிசுது இந்த வருஷத்துல...அப்புறம் ஊருக்கு வந்துட்டு போறதும் பெரிய சிக்கலா இருந்தது...சரின்னு திரும்ப வேலை தேடும் படலம் ஆரம்பிச்சது...கடைசியா மறுபடியும் வந்தது பெங்களூர்....இப்போ AOL....முன்னைவிட செம சந்தோஷம்...முக்கால்வாசி பேர் என்கூட சென்னைல வேலை பார்த்தவங்கதான்...இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு....

இப்படி இந்த 10 வருஷம் நானே நினைக்காத பல விஷயங்களை தந்துருக்கு.....அடுத்த 10 வருஷம் இத விட முக்கியமா இருக்கும்...வாழ்கைல செட்டில் ஆகறது. ...தங்கை கல்யாணம்...என் கல்யாணம் ன்னு நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு...ஆண்டவன் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கணும்...அதுக்கு வேண்டிக்கொண்டு...அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லி விடைபெறுகிறேன்...நன்றி!!! வணக்கம். :)

Wednesday, September 23, 2009

கமலுக்கும் போக்கிரி வடிவேலுக்கும் உள்ள ஒற்றுமை

பதிவர் 1:போக்கிரி வடிவேலுக்கும் கமலுக்கும் உள்ள ஒற்றுமை???


பதிவர் 2: தெரியலே???

பதிவர் 2:ரெண்டு பேராலயும் அவங்க கொண்டைய மறைக்கவே முடியல எவ்வளவு வேஷம் போட்டாலும் :))))))))

பதிவர் 2: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எப்படில்லாம் யோசிக்கிறாங்க

Friday, August 21, 2009

விநாயகர் சதுர்த்தி---ஸ்பெஷல் ஜோக்

ஒரு பெரிய கப்பல்ல நெறைய பேரு ஒரு பயணம் போனாங்க...அப்ப நடுக்கடல்ல அந்த கப்பல் கோளாறு ஆகிருச்சு....எல்லாரும் தப்பிக்க என்னனமோ பண்றாங்க ஆனா முடியல...கப்பலும் கொஞ்சம் கொஞ்சமா மூழ்கிட்டு வருது...ஒடனே அல்லாரும் நம்ம பிள்ளையார வேண்டுறாங்க...
விநாயகா...வினை தீர்ப்பவனே நு பயங்கரமா அழுதுகிட்டே பாடுறாங்க...இவங்க வேண்டினதாலயோ இல்ல இவங்க பாட்ட கேட்டு மெர்சலாயோ நம்ம பிள்ளையார் வராரு....
ஒடனே எல்லாரும் அப்பா விநாயகா எங்கள காப்பாத்துப்பா ன்னு கதற்ராங்க ..ஒடனே கொஞ்சம் யோசிச்ச பிள்ளையார் என்ன பண்ணாருன்னா.............
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!இப்படி கெட்டபெல்லாம் மாத்தி செம ஆட்டம் போட்டாரு பிள்ளையார் கரைலேந்து....

இத பாத்து கொஞ்சம் கடுப்பும் கொஞ்சம் பயமுமா எல்லாரும் பிள்ளையார் கிட்ட ...என்ன பிள்ளையாரே எங்கள காப்பாத்தாம இப்படி டான்ஸ் ஆடுறியே இது நியாயமான்னு கேட்டாங்க.

அதுக்கு பிள்ளையார்

"ஏன்டா வெண்ணைங்களா நான் ஒரு நாள் இப்படி அடுறதுக்கே இப்படி பீல் பண்றீங்களே என்னைய வருஷா வருஷம் கடல்ல தூக்கிபோட்டு என்னமா ஆடுனீங்க அப்பா எனக்கு எப்படி இருக்கும்"....இந்தா இன்னும் கொஞ்சம் பாருன்னு போட்டாராம் செம டான்ஸ்...
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.....:))))))))))))

Saturday, March 07, 2009

துக்ளக் கேள்வி பதில்????

இந்த வார துக்ளக்கில் ஒரு கேள்வி பார்த்தேன்....கேள்வி இதுதான்...
"இலங்கை விவகாரத்தில் ஏன் இலங்கையிலுள்ள எந்த தமிழரும் தீக்க்குளிக்கவில்லை???"

எனக்கும் இதற்க்கு பதில் தெரியவில்லை...யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்!!!!!!!!!!!!!......இப்படி ஒரு பதிவை போட்டதால் என்னை திட்டினாலும் நான் கவலைப்படமாட்டேன்!!!!!!!

Tuesday, March 03, 2009

வந்தாச்சு!!! வந்தாச்சு!!! தேர்தல் வந்தாச்சு......

  நம்ம தலைவர்????? மன்மோகன் சிங் இப்போதான் பிரதமரான மாதிரி இருக்கு அதுக்குள்ள 5 வருஷம் ஓடிபோயிருச்சு!!!!!!!!!!!!!!!

(மன்மோகன் சிங் : ஏன்டா கொய்யால நானே எப்படா இந்த நாற்காலிய விட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு இருக்கேன்...உனக்கு பீலிங்க்ஸா...உனக்கு 5 வருஷம் ஓடிருச்சு ஆனா எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ் )


எலெக்ஷன் வந்தாலே எனக்கு ரொம்ப குஷி ஆகிடும்....எப்பவுமே. இருக்குற அத்தனை பேப்பர், ரிப்போர்டர்,ஜூ.வீ ,நக்கீரன்,துக்ளக் னு ஒன்னு விடாம படிப்பேன்....அதுவும் போன எலெக்ஷன் நான் காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தேன்...அதனால டிஸ்கஷன் பயங்கரமா இருக்கும்...கீரநூர்ல உள்ள லோக்கல் ஆளுங்கல்ட கருத்து கணிப்பெல்லாம் நடத்துவோம்....:)))))

இப்போ இந்த எலக்ஷனுக்கு நான் மும்பை வந்தாச்சு....இந்த ஊர்ல பயங்கரவாதிங்கலால தான் பிரச்சினையே தவிர அரசியல் வாதிங்க நம்ம ஊர் மாதிரி சண்ட போட்டுக்க மாட்டேங்குறாங்க....அதனால ஒரு பரபரப்பே இல்லாம ரொம்ப சப்புனு இருக்கு எப்பவுமே ... :)) பாப்போம் எலெக்ஷன் நேரத்துலயாவது கொஞ்சம் காரசாரமா இருக்கான்னு?

I miss you Tamilnadu :((((((

அப்படியே கீழ இருக்குற படத்தையும் பாருங்க....கூகிள் லேந்து எடுத்தது!!!!!!!!

Tuesday, February 10, 2009

தமிழ் சினிமாவில் வேற்றுமொழி நாயகர்கள்!!!!!!


இன்று கே டிவியில் மௌனம் சம்மதம் படம் பார்த்தேன்..அதற்க்கு முன்னமே முரளிகன்ணனின் எதிர்நாயகர்கள் பதிவை வாசித்த காரணமோ என்னமோ அவர் இதுவரை தொடாத இந்த விஷயத்தை பற்றி எழுதலாம் என்று தோணி ஆரம்பிக்கிறேன் :)))))))நான் ரொம்ப சின்னப்பய்யன் அதனால எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேந்து வந்தவேற்றுமொழி நாயகர்கள் பற்றி பார்க்கலாம்......இதுக்கும் மின்னாடி முரளிகண்ணன் அவர்கள் தாராளமாக தொடரலாம் ......:அவர்தான் குரு...நான் ஏகலைவன் மாதிரி ஒரு சிஷ்யன் அவ்வளவுதான்.....சரி மேட்டருக்கு போவோம்...

மம்முட்டி:

இவர் படம் நான் பார்த்து ஒரு மலையாள படம்...பெயர் நினைவில் இல்ல..ஆனா இந்த படத்தில் இவர் மோகன்லாலுடன் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்...ஒரு ஓடும் ரயிலில்தான் படம் முழுவதும் நடக்கும்....இந்த பதிவை யாரவது படித்தீர்களானால் இந்த படத்தை சொல்லலாம் :)))))))))அடுத்து ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ்....இந்த படத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருப்பார்.....(பட வரிசை ஒழுங்காக இருக்காது....எனக்கு ஞாபகத்தில் இருந்த படங்களை பற்றித்தான் சொல்லிஇருக்கிறேன்).

தளபதி:

இந்த படம் வந்த போது எனக்கு ஒரு 5 அல்லது 6 வயசு இருக்கும்...ஆனால் இந்த படத்தில் மம்முட்டியின் நடிப்பை இப்பொழுது பார்த்தாலும் எனக்கு புல்லரிக்கும்...,,அவ்வளவு இதமாக அருமையாக நடிதிருப்ப்பார்...அவருடைய உடல்மொழி மற்றும் ரஜினியுடனான அவர் காட்சிகள் எல்லாவற்றிலும் அவர் ஒரு மகத்தான நடிகன் என்று காட்டிருப்பார். ஏன் தேவா???? நீ என் நண்பன்டா....டயலாக் எல்லாம் இப்போ கேட்டாலும் கண்ணீர்வரும்.....அப்புறம் ஷோபனாவ தலைவருக்கு பொண்ணுபார்க்க போற சீன்..அதுல சாருஹாசன் கழுத்தை பிடித்து பேசும் காட்சி...மனுஷன் பின்னிருப்பான் .

மௌனம் சம்மதம்:


ஒரு வக்கீலாக இடைவேளைக்கு பிறகே வந்து ஒரு படத்தை தூக்கி நிறுத்தறது இவரால தான் முடியும்.....இவரோட மலையாள accent ல நீதிமன்றத்துல வாதாடுற காட்சி சூப்பரா இருக்கும்...போதாகொறைக்கு அமலா வேற கதாநாயகி...இந்த படம் இயக்கியது யாருன்னு எனக்கு தெரியல :(((...தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்...கொஞ்சம் பார்க்கலாம்கிற நல்ல படங்கள்ல இதுவும் ஒன்னு....


அழகன்:

அடா அடா அடா....மமுட்டியபத்தி பேசிட்டு இந்த படத்த சொல்லாட்டி என்ன ஆகுறது....ஒரு ஹோட்டேலியர் தன் குழந்தைகளோட தனியா வாழுராறு அவர் வாழ்கையில வர மூணு பொண்ணுங்களோட என்ன மாதிரியான உறவு...நட்பா???காதலா என்று சொல்லும் படம்...இந்த படத்துல வர சங்கீத ஸ்வரங்கள் பாட்டு ஆகா..இப்பவும் கேட்டவுடன் சொக்கி போற பாட்டு...!!!!இசை அம்சலேகா!!!!!!! (நான் இசைஞானி என்று எழுதிருந்தேன்....சுட்டிக்காட்டிய அனானி நண்பருக்கு நன்றி)


எதிரும் புதிரும்!!

இதில் ஒரு போலீசாக வீரப்பனை பிடிக்கிற வேடத்தில் நடித்திருப்பார்.....இதிலும் கலக்கிருப்பார்...


மறுமலர்ச்சி:

இந்த படத்தில் ராசு படையாசியாகவே வாழ்ந்திருப்பார் ....இதில் தேவயானி மம்முட்டியின் மனைவியாக நடித்திருப்பார்...இன்னும் குறிப்பிட்டு சொல்ல ரஞ்சித்.மன்சூரலிகான் ஆகியோரும் கலக்கிருப்பார்கள்....

ஆனந்தம்:

இந்த படத்தில் இவர் பின்னி பெடலடுத்துருப்பார்....இதிலும் இவருக்கு தேவயானி ஜோடி....இவர் கல்யாணம் பண்ணி புது மனைவியிடம் வழிகிற வழிசலாகட்டும்....தம்பியிடம் ஆற்றாமையில் பொங்குவதாகட்டும் தான் ஒரு நடிப்பின் சிகரம் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்.....

அவ்வளவுதான் இனி ஓவர் டு முரளிகண்ணன் :))))))))அவருக்கு ஒரு டாபிக்கை எடுத்து குடுத்த சந்தோஷத்துடன் இந்த பதிவை முடித்துக் "கொல்கிறேன்"...நன்றி வணக்கம்