இன்று கே டிவியில் மௌனம் சம்மதம் படம் பார்த்தேன்..அதற்க்கு முன்னமே முரளிகன்ணனின் எதிர்நாயகர்கள் பதிவை வாசித்த காரணமோ என்னமோ அவர் இதுவரை தொடாத இந்த விஷயத்தை பற்றி எழுதலாம் என்று தோணி ஆரம்பிக்கிறேன் :)))))))நான் ரொம்ப சின்னப்பய்யன் அதனால எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேந்து வந்தவேற்றுமொழி நாயகர்கள் பற்றி பார்க்கலாம்......இதுக்கும் மின்னாடி முரளிகண்ணன் அவர்கள் தாராளமாக தொடரலாம் ......:அவர்தான் குரு...நான் ஏகலைவன் மாதிரி ஒரு சிஷ்யன் அவ்வளவுதான்.....சரி மேட்டருக்கு போவோம்...
மம்முட்டி:
இவர் படம் நான் பார்த்து ஒரு மலையாள படம்...பெயர் நினைவில் இல்ல..ஆனா இந்த படத்தில் இவர் மோகன்லாலுடன் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்...ஒரு ஓடும் ரயிலில்தான் படம் முழுவதும் நடக்கும்....இந்த பதிவை யாரவது படித்தீர்களானால் இந்த படத்தை சொல்லலாம் :)))))))))அடுத்து ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ்....இந்த படத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருப்பார்.....(பட வரிசை ஒழுங்காக இருக்காது....எனக்கு ஞாபகத்தில் இருந்த படங்களை பற்றித்தான் சொல்லிஇருக்கிறேன்).
தளபதி:
இந்த படம் வந்த போது எனக்கு ஒரு 5 அல்லது 6 வயசு இருக்கும்...ஆனால் இந்த படத்தில் மம்முட்டியின் நடிப்பை இப்பொழுது பார்த்தாலும் எனக்கு புல்லரிக்கும்...,,அவ்வளவு இதமாக அருமையாக நடிதிருப்ப்பார்...அவருடைய உடல்மொழி மற்றும் ரஜினியுடனான அவர் காட்சிகள் எல்லாவற்றிலும் அவர் ஒரு மகத்தான நடிகன் என்று காட்டிருப்பார். ஏன் தேவா???? நீ என் நண்பன்டா....டயலாக் எல்லாம் இப்போ கேட்டாலும் கண்ணீர்வரும்.....அப்புறம் ஷோபனாவ தலைவருக்கு பொண்ணுபார்க்க போற சீன்..அதுல சாருஹாசன் கழுத்தை பிடித்து பேசும் காட்சி...மனுஷன் பின்னிருப்பான் .
மௌனம் சம்மதம்:
ஒரு வக்கீலாக இடைவேளைக்கு பிறகே வந்து ஒரு படத்தை தூக்கி நிறுத்தறது இவரால தான் முடியும்.....இவரோட மலையாள accent ல நீதிமன்றத்துல வாதாடுற காட்சி சூப்பரா இருக்கும்...போதாகொறைக்கு அமலா வேற கதாநாயகி...இந்த படம் இயக்கியது யாருன்னு எனக்கு தெரியல :(((...தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்...கொஞ்சம் பார்க்கலாம்கிற நல்ல படங்கள்ல இதுவும் ஒன்னு....
அழகன்:
அடா அடா அடா....மமுட்டியபத்தி பேசிட்டு இந்த படத்த சொல்லாட்டி என்ன ஆகுறது....ஒரு ஹோட்டேலியர் தன் குழந்தைகளோட தனியா வாழுராறு அவர் வாழ்கையில வர மூணு பொண்ணுங்களோட என்ன மாதிரியான உறவு...நட்பா???காதலா என்று சொல்லும் படம்...இந்த படத்துல வர சங்கீத ஸ்வரங்கள் பாட்டு ஆகா..இப்பவும் கேட்டவுடன் சொக்கி போற பாட்டு...!!!!இசை அம்சலேகா!!!!!!! (நான் இசைஞானி என்று எழுதிருந்தேன்....சுட்டிக்காட்டிய அனானி நண்பருக்கு நன்றி)
எதிரும் புதிரும்!!
இதில் ஒரு போலீசாக வீரப்பனை பிடிக்கிற வேடத்தில் நடித்திருப்பார்.....இதிலும் கலக்கிருப்பார்...
மறுமலர்ச்சி:
இந்த படத்தில் ராசு படையாசியாகவே வாழ்ந்திருப்பார் ....இதில் தேவயானி மம்முட்டியின் மனைவியாக நடித்திருப்பார்...இன்னும் குறிப்பிட்டு சொல்ல ரஞ்சித்.மன்சூரலிகான் ஆகியோரும் கலக்கிருப்பார்கள்....
ஆனந்தம்:
இந்த படத்தில் இவர் பின்னி பெடலடுத்துருப்பார்....இதிலும் இவருக்கு தேவயானி ஜோடி....இவர் கல்யாணம் பண்ணி புது மனைவியிடம் வழிகிற வழிசலாகட்டும்....தம்பியிடம் ஆற்றாமையில் பொங்குவதாகட்டும் தான் ஒரு நடிப்பின் சிகரம் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்.....
அவ்வளவுதான் இனி ஓவர் டு முரளிகண்ணன் :))))))))அவருக்கு ஒரு டாபிக்கை எடுத்து குடுத்த சந்தோஷத்துடன் இந்த பதிவை முடித்துக் "கொல்கிறேன்"...நன்றி வணக்கம்