Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன்....விமர்சனம்


செல்வராகவன் இயக்கத்தில் மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்து இன்று வெளிவந்திருக்கும் படம். இந்த மூன்று வருடங்களாக நான் ரொம்ப எதிர்பாத்தேன்...பாட்டு எல்லாம் கேட்ட பின்னாடியும் செம எதிர்பார்ப்பு இருந்தது....இன்னிக்கு காலேல பெங்களூர் இன்னோவேடிவ்ல பாத்தாச்சு....

எப்போ தமிழ்ல வரும் இது மாதிரி படம்னு கேபிள் சங்கர் கேட்ட கேள்விக்கு பதில்தான் இந்த படம். இந்த மாதிரி ஒரு "Fantacy Adventure" படத்த 35 கோடி பட்ஜெட்ல எடுக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்...ஆனா செல்வா இங்க இருக்குற வசதிகளை வெச்சு ஒரு அட்டகாசமான படம் கொடுத்திருக்கார்....இப்படி ஒரு கதையை யோசிச்சதுக்கே அவருக்கு ஒரு அவார்ட் குடுக்கணும்...

இந்த படத்துல மொத்தம் மூணு விஷயம் இருக்கு...

1. செல்வாவோட திரைக்கதை: ஆரம்பத்தில் எங்கயோ ஆரம்பிக்கிற படம் interval போது வேற ஏதோ ஒரு உலகத்துக்கு போகுது...சத்தியமா செல்வாவோட உழைப்பும, அவர் பண்ண ஹோம் வொர்க்கும் படம் முழுக்க தெரியுது...

2. ஒளிப்பதிவு,படத்தொகுப்பு அப்புறம் கலை...இந்த மூணு பார்ட்டும் ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க...

3: ரீமா, பார்த்திபன் அண்ட் கார்த்தி....நடிப்புல ரீமா சும்மா பட்டாசு கிளப்பிருக்காங்க...முதல் பாதில அவங்க துப்பாக்கி சுடும் ஸ்டைலும் அந்த அலட்சியமான லுக்கும்..வாவ் அட்டகாசம்..அப்புறம் பார்த்திபன் இவர் இரண்டாம் பாதிலதான் வரார்...லேட்ட வந்தாலும் அதகளம் பண்றார்..கார்த்தி முதல் பாதில கலக்கிருந்தாலும், இரண்டாம் பாதில அவங்க ரெண்டு பேர் முன்னாடி எடுபடல...
ஆண்ட்ரியா அவங்க தான் பாவம்...ரொம்ப ஒன்னும் வேலை இல்ல...:( அவங்க பாடின "ஒரு மாலை நேரம்" பாட்டும் படதுதுல காணோம்... :((.

அப்புறம் இந்த படத்துல துநிசு செல்வா சில விஷயங்கள் பண்ணிருக்காரு...அது எல்லாம் வெட்டுலேந்து எப்படி தப்பிசுசுன்னு தெரியல...ஆனா அந்த காட்சிகள் எல்லாம் கண்டிப்பா தேவை...

மொத்ததுல "ஆயிரத்தில் ஒருவன்"...தமிழ் திரையுலகை பெருமைப்படுத்துபவன் :)
எல்லாரும் தியேட்டர்ல போய் இந்த படத்த பாருங்க...மிஸ் பண்ண கூடாத ஒரு படம் இது.