Thursday, November 27, 2008

திகிலில் மும்பை!!!




நேற்று இரவு ஒன்பதரை மணிக்கு தொடங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் இந்த பதிவை எழுதும் காலை 10:20 வரை ஒரு முடிவிற்கு வரவில்லை.இதுவரை 101 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் 12 பேர் போலிஸ்.அவர்களுக்கு வீர வணக்கம்.

இன்று வீட்டைவிட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என்று போலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது...மும்பை ஒரு வித அமானுஷ்யமான அமைதியில் உள்ளது... இது வரை ஒரு 60 போன் கால்லாவது வந்து இருக்கும் நேற்று இரவிலிருந்து... அனைவருக்கும் நன்றி!!!  

அரசாங்கம் வழக்கம் போல் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது..இனி ஒரு ரெண்டு வாரம் கழித்து பிரதமர் தன் தலைவி சோனியாவுடன் குண்டு வெடித்த இடங்களை பார்வை இடுவார்...இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதிஉதவி செய்வார்கள்.... போங்கடா.............

இதுக்கு மேலும் இந்த அரசாங்கம் விழித்துக்கொள்ளவில்லை என்றால்...... நம்ம என்ன செய்வது உயிரை கையில் பிடித்து நாட்களை கடத்த வேண்டியதான்.

.. அடுத்த குண்டுவெடிப்பில் தப்பித்தால் பதிவு எழுதுவோம் இல்லை என்றால் நம்மை பற்றி பிறர் பதிவெழுதுவார்கள்... Whatever Happens...Life has to go on...lets go with life