Thursday, September 25, 2008

Online Advertising ஒரு எளிய அறிமுகம் 2


ஒரு வழியாக இப்போதுதான் நேரம் கிடைத்தது...மிக தாமதமாக வந்தமைக்கு மன்னியுங்கள்.... இனி Online Advertising கில் என்னென்ன முறைகள் பின்பற்றபடுகிறது, நிறுவனகள் வருவாயை எப்படி கனகிடுகின்றன என்பது பற்றி பார்ப்போம்.... அதற்கு முன்னால் கீழே இருக்கும் படத்தை கொஞ்சம் பாருங்கள்... இதில் Advertiser என்பது ஒரு நிறுவனம் அது அதன் புதிய பொருளை ஒரு publisher இனியதளத்தில் (Yahoo,MSN,)விளம்பரப்படுத்த விரும்புகிறது என வைத்துக்கொள்வோம்...

சில நிறுவனங்கள் தானே ஆட்கள் வைத்து creative design செய்யும்.
சில அதற்கென்றே இருக்கும் Agency களிடம் தந்துவிடும். இப்படி அந்த Creative எனப்படுவது ஒரு .gif, .swf, video என பல வகைகளிலும் இருக்கும். publisher நிறுவனத்திற்கு அந்த creative வந்ததும் அவர்கள் தங்கள் வாசம் உள்ள publishing tool மூலம் அந்த creative வை தங்கள் இணையத்தில் சேர்ப்பார்கள். 
கொஞ்சம் மண்டை காய்ந்துவிட்டதா?

சரி Creative போட்டாச்சு இதுக்கு எப்படி கணக்கு வைத்திருப்பார்கள்?

எல்லா வேலையையும் தொடங்குவதற்கு முன்னால் Publisher Advertiser ரிடம் Contract போட்டுருப்பார்கள்...இப்போது புழக்கத்தில் உள்ள நாலு முறைகளில் ஒன்று, எத்தனை நாள் ஓடவேண்டும், எந்த பக்கத்தில் ஓடவேண்டும் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டும் என்பது எல்லாம் அந்த Agreement இல் இருக்கும்.  

சரி அது என்ன நாலு முறைகள்??  

1.CPA
2.CPM
3.CPC 
4.CPD

1. CPM ( Cost Per Mille) : அதாவது ஒரு 1000 முறை அந்த Ad தெரிவதற்கு இவ்வளவு ரூபாய் என்று agreement இருக்கும். ( In Latin Mille means Thousand).  
2. CPA (Cost Per Action) இது நீங்கள் பார்க்கும் Ad மூலமாக ஒரு செயல் நிகழும்போது இவ்வளவு ரூபாய் என போடும் ஒப்பந்தம். இது நீங்கள் இன்சூரன்ஸ் , பாங்கிங் போன்ற விளம்பரங்களில் உள்ள Form ஐ பூர்த்தி செய்தால் மட்டுமே காசு.  

3. CPC (Cost Per Click) இது நீங்கள் பார்பதோடு மட்டுமல்லாமல் அதை கிளிக் செய்தால் மட்டுமே. கூகிள் ஆட சென்ஸ் போல.

4. CPD (Cost Per Day) இது என்னத வகையிலும் இருக்கலாம் ஆனால் ஒரு நாள் முழுக்க வருமாறு போடப்படும் ஒப்பந்தம். அந்த 24 மணி நேரமும் இந்த ad தான் வரும். சரி 

இப்போது இது போதும்...மீதி அடுத்த பதிவில்... சந்தேகங்கள் இருப்பின் பின்னோட்டத்தில் கேளுங்கள்....