என்னுடைய "தீபாவளிக்கு என்ன படம் பாக்கலாம்" பதிவில் இந்த படம் பற்றி மோசமாக எழுதிஇருந்தேன். ஆனால் சூர்யா மற்றும் ஹரி இருவரும் சேர்ந்து என் மண்டையில் நச்சென்று ஒரு குட்டு வைத்ததுபோல் இருந்தது படம்.
வழக்கமான இரட்டைக்குழந்தைகள் கதைதான்!! ஆனால் குடுத்திருக்கும் விதம்?? ஹரி ஒரு பிரமாதமான திரைக்கதை அமைப்பாளர் என்பதை காட்டுகிறது॥
சரண்ராஜ், சரண்யா தம்பதிகளுக்கு இரட்டைகுழந்தைகள் பிறக்க ஒரு குழந்தை இரயிலில் காணாமல் போகிறது. காணாமல் போன குழந்தை நல்லூர் என்ற ஊரில் உள்ள பண்ணையார் நாசரிடம் கிடைக்கிறது. நாசர் அந்த குழந்தைக்கு "வெற்றிவேல்" என பெயரிட்டு வளர்க்கிறார். சரண்யாவிடம் வளரும் இன்னொரு குழந்தை "வாசு" என்ற பெயரில் வளர்கிறது. வேல் என்ற வெற்றிவேல் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் செல்லமாக இருக்கிறான். நாசரின் ஜென்ம விரோதியான கலாபவன் மணிக்கும் வேலுக்கும் தினமும் சண்டைவர, காரணம் flashback கில் தெரிகிறது. இப்படியிருக்க சென்னையில் இருக்கும் வாசு ஒரு தனியார் துப்பரிவாளராக வேலை செய்கிறார். 7up சுவாதியாக வரும் அசினுடன் காதல் கொள்ள அது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தத்தில் முடிகிறது.வாசுவிர்க்கு தன்னுடைய அண்ணன் இருக்கும் இடம் அசின்மூலமாக தெரியவர அண்ணனை அழைத்துவர நல்லூர் செல்கிறார். அவர் அண்ணனை அழைத்து வந்தாரா, கலாபவன் மணி என்ன ஆனார் என்பதுதான் மீதி கதை.
சூர்யா நெஜமாகவே மிக நன்றாக நடித்துள்ளார். அவருக்கு எங்கள் ஊரில்( சிவகங்கை) இருக்கும் வரவேற்ப்பை!!!!!! பார்க்கும்போது அவர் ஒரு இடத்தை பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. இரட்டைவேடத்தில் அவர் காட்டிய வேறுபாடு சூப்பர்!!! அவருக்கும் அசின்னுக்கும் இடையே ரசாயனம் (அதான் Chemistry) நன்றாக உள்ளது. ஆனால் அசின்னுக்கு இந்தப்படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை. அசின் பார்க்க நன்றாக உள்ளார். அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.
வில்லனாக கலாபவன் மணி. அவருடைய நகைச்சுவை கலந்த வில்லத்தனம் புதிதில்லை என்றாலும் ரசிக்க முடிகிறது. நாசருக்கும், அம்பிகாவிர்க்கும்( நாசரின் மனைவி) வேலையே இல்லை. பாட்டியாக வரும் லக்ஷ்மி தான் ஒரு சிறந்த நடிகை என்று காட்டி உள்ளார். எல்லாவற்றுக்கும் மேல் இந்த படத்தில் வடிவேலு இருக்கிறார். அவரை சரியான நேரத்தில் பயன்படுத்தி உள்ளார் இயக்குனர்.
படத்தின் முதல் பாதி வழக்கமாக சென்றாலும் ரெண்டாவது பாதியில் படத்தை தூக்கி நிருத்தயுள்ளது ஹரியின் புத்திசாலித்தனமான திரைகதையும் சூர்யாவின் நடிப்பும்தான். படத்தின் visual effects அட்டகாசம். இரண்டு சூர்யாவும் சேர்ந்து வரும் காட்சிகள் தத்ரூபமாக உள்ளது. ப்ரியன் ஒளிப்பதிவில் புதிதாக எதுவும் செய்யவில்லை.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் யுவனின் இசை। பாடல்கள் மிகவும் சுமார். பின்னணி இசையும் சுமார் ரகம்தான். இயக்குனர் பாடல்கள் மற்றும் முதல் பாதி திரைகதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் வேல் இன்னொரு சாமி ஆக வந்துருக்கும்.
Anyway, வேல் நிச்சயம் நம்மை போரடிக்காது.
மொத்தத்தில் வேல் வெற்றிவேல்