Online advertising என்பது ஒரு பணம் கொழிக்கும் துறை. பணம் என்றால் கோடிகளில்.
நான் இந்த துறையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இருப்பதால் எனக்கு தெரிந்த வரையில் இதை பற்றி விளக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.
நான் இந்த துறைக்கு வந்ததே ஒரு விபத்துதான்!!! என்னடா எல்லா சினிமா மக்கள் மாதிரி சொல்றானேன்னு நினைக்காதீங்க. சத்தியமா நான் வேலைக்கு சேரும் வரை இதை பற்றி ஒன்றுமே தெ
ரியாது. அவ்வளவு ஏன் இதை பற்றி நான் கேள்விபட்டதுகூட இல்லை.இந்த துறையில் சேர்ந்தவுடன் தான் இதன் வீ
ரியமும் இதன் மார்கெட் வால்யுவும் புரிந்தது!!!
எப்படி ஒரு பத்திரிக்கை, தொலைக்காட்சி சானல் நடத்த விளம்பர வருவாய் முக்கியமோ அவ்வளவு மிக்கியம் ஒரு இணையதளம் நடத்துவதற்கும். இதில் வரும் வருமானத்தை கொண்டு தான் மற்ற செலவுகளை அது செய்யும்.
எடுத்துகாட்டாக ஒரு நாளிதழில் முதல் பக்கம் விளம்பரம் செய்ய வேண்டுமானால் நிறைய செலவாகும், அதேபோல் T.V யில் Prime Time வரும் விளம்பரங்கள் அதிக விலை போகும். ஏன் அதற்கு மட்டும் அவ்வளவு விலை?
உங்களுக்கே விடை தெரியும் " முதல் பக்கத்தில் வரும் விளம்பரமும், prime time மில் வரும் விளம்பரத்திற்கும் அதிக பார்வையாளர்க
ள் கிடைப்பார்கள்".
இதே தான் இணையதளத்திற்கும்.
இவர்கள் தங்களின் Homepage ஐ பல slot களாக டிசைன் செய்து ஒவ்வொரு ஸ்லாட்டும் ஒவ்வொரு விலையில் விற்பார்கள். இந்த விலை அந்த இணையத்தளத்தின் மற்ற பக்கங்களின் விலையை விட அதிகமாக இருக்கும்.
ஆனால் இதுவும் நேரத்துக்கேற்ப மாறும். இப்போது ஒரு கிரிகெட் மேட்ச் நடக்கிறது என்று வைத்துகொள்வோம் அந்த நேரத்தில் முக்கால்வாசி மக்கள் அந்த இணையத்தின் விளையாட்டு பக்கத்திற்கு தான் செல்வார்கள் எனவே விளையாட்டு பக்கத்திற்கு அன்று மவுசு அதிகமாக இருக்கும்.
கீழே இருக்கும் Screenshot பார்த்தால் உங்களுக்கு புரியு
ம் இங்கே நான் சிகப்பு கட்டம் கட்டி இருப்பதுதான் விளம்பரம்.
வரும் பதிவுகளில் எப்படி இந்த விளம்பரங்கள் வருகின்றன அதன் தொழில்நுட்பம் என்ன என்பன பற்றி பார்போம்!!!!!
தங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் :))))