முதல் இரண்டு பதிவை படிக்காதவர்கள் அப்படியே கொஞ்சம் கீழே போய் அதை படித்துவிட்டு வந்துவிடுங்கள் ப்ளீஸ்...
சரி மேட்டருக்கு வருவோம்!!!
இப்படி CPA,CPC,CPM and CPD படி அக்ரிமன்ட் போடும் ஒரு ஏஜென்சி அதைக்கொண்டு தான் லாபம் பார்க்க முடியும்...அதனால் தான் நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் முக்கியம். இங்கு நாம் code அடித்து அதை டெஸ்ட் பண்ணி அப்பறம் கிளைன்ட் பார்வைக்கு அனுப்ப நேரம் கிடையாது...நமக்கு வரும் வேலை எல்லாம் அவசர வேலையாகவே வரும்..அதிகபட்ச நேரமே 15 நிமிஷம் தான்...ஆனாலும் இந்த டென்ஷனில் வேலை செய்வது ஜாலி ஆகத்தான் இருக்கும் :)))
சரி நீங்கள் ஒரு வெப்சைட் ஆரம்பித்து உள்ளீர்கள்... உங்கள் தளத்திற்கு ஹிட்ஸ் நல்லா இருக்கு நீங்கள் அதில் விளம்பரங்கள் போடலாம் என்று நினைகிறீர்கள் இப்போது என்ன செய்வீர்கள்???
Yahoo, MSN,Google போன்ற முதலைகள் எல்லாம் சொந்தமாகவே ஒரு Ad Server வைத்து உள்ளார்கள். சொந்த server இல்லாதவர்களுக்காகவே Doubleclick, Real Media போன்ற கம்பெனிகள் DART (Dinamic Advertising and Reporting Tool), OAS(Open Ad Stream),Zedo,Atlas என்று பல உள்ளது.
நாம் செய்ய வேண்டியது இது எல்லாவற்றையும் பார்த்து நமக்கு எது பிடித்துருகிறதோ அதை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான்.
இப்படி சொந்த server இல்லாமல் வேற ஒரு server உபயோகபடுத்துவதை 3rd party Server என்போம். அந்தந்த சர்வர் மூலமாக வரும் code ஐ 3rd party Code என்போம்.
இந்த மூன்று பதிவுகளும் இந்த துறையைபற்றிய ஒரு சின்ன அறிமுகம் தான்.
நாம் மூன்று வருடங்களாக வேலை செய்யும் ஒரு துறையை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் நான் எழுதியது.
என் முயற்சி உங்களுக்கு கொஞ்சமாவது பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி...ஏதாவது குறைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள், திருத்திக்கொள்கிறேன்...
Online Advertising க்கு என்றே ஒரு ஆங்கில blog ஆரம்பித்துள்ளேன் படித்து பார்த்து சொல்லுங்கள் :)))