மத்த ரெண்டு தீபாவளி படங்களும் பாத்தாச்சுங்கரதுனால இந்த படம் பாக்கணும்னு ரெண்டு வாரமா நெனச்சு நேத்து எனக்கு ஆபீஸ்ல off குடுத்ததுனால காசி தியேட்டர் ல படம் பாக்க போயிட்டேன். இந்த படம் பத்தி எல்லாரும் நல்லவிதமா சொல்லி எழுதி இருந்ததும் ஒரு காரணம். நல்லவேளை நம்மள ஏமாத்தாம ஒரு படம் குடுத்துருக்கார் இயக்குனர் வெற்றிமாறன்!!! நல்ல முயற்சி!!!
இந்த படத்துல பைக் தன் ஹீரோ...ஆமா அத சுத்திதான் கதையே!!!இதுவே நமக்கு புதுசுதான்!!! ஹீரோ(தனுஷ்) வெட்டியா ஊரசுத்துறது பிடிக்காம ஒரு கட்டத்துல அவர் அப்பா ஒரு 70,000/- ரூபாய் குடுத்து பொழசுக்க சொல்றாரு. ஆனா தனுஷ் தன்னுடைய நீண்டநாள் ஆசையான ஒரு பைக் வாங்கறாரு. வீட்டுல திட்டுவிழ தனுஷ் அந்த பைக்க வெச்சே ஒரு வேல தேடிக்கறார். அதுக்கு அப்பறம் அவர் வாழ்க்கைல ஏகப்பட்ட நல்லவிஷயங்கள் நடக்குது. அவர் ஒருதலையா காதலிச்ச பொண்ணு அவர லவ் பண்றா, வீட்டுலயும் மரியாத கூடுது. இப்படி வாழ்க்கை சந்தோஷமா பொகும்போது அவரோட அந்த பைக் திருடு போய்டுது.அத கண்டுபுடிக்க போகும்போது என்னனென்ன பிரச்சனைகள் வருது அத அவர் எப்படி face பண்றார் இதான் படம்.
இப்படி ஒரு கதைய எடுத்து அத கொஞ்சம் கூட போர் அடிக்காம குடுத்ததுக்காகவே வெற்றிமாரனை எவ்வளவு வேணுமானாலும் பாராட்டலாம்.இந்த படத்தில் என்னை மிகவும் கவர்வது ரவுடி கூட்டத்தின் தலைவனாக வரும் "கிஷோர்" என்பவரின் பாத்திரமும் அவரின் மிக இயல்பான நடிப்பும். அவருக்கு இதுதான் முதல் படமா இல்லை வேறு மொழிகளில் ஏதாவது நடித்துருக்கிரரானு தெரியல. யாரவது தெரிஞ்சா சொல்லுங்க. அப்பறம் தனுஷ், அவரு அலட்டிக்காம அசால்டா நடிச்சுருக்காரு. அதுலயும் அந்த மருத்துவமனை காட்சி, தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் வளர்கிறார் என்று காட்டுகிறது.
அடடா இவ்ளோ நேரம் படத்தபத்தி பேசிட்டு ஹீரோயின் பத்தி பேசவே இல்லையே. இந்த படத்தோட ஹீரோயின் "திவ்யா" அதாங்க "குத்து" படத்துல நடிச்சாங்களே அந்த "ரம்யா" தான். இந்த படத்துல அவங்க அவ்ளோ அழகு......அதுவும் அவங்க சிரிப்பு இருக்கே வாவ் சோ க்யூட்!!!!!!! இவங்க அடுத்த படம் "வாரணம் ஆயிரம்" எப்படா வரும்னு காத்திருக்கேன்..
அப்பறம் டேனியல் பாலாஜி, அவருக்கு யாராவது வேறு ஒரு ரோல் குடுங்கப்பா??அவர் அண்ணியாக வருவது "அஞ்சு"வாம் "ஆயிரத்து அஞ்சு" மாதிரி இருக்கிறார்.
எடிட்டிங் v.t.விஜயன், அவருடைய அனுபவம் இந்த படத்துக்கு ரொம்ப உதவிருக்கு. அப்பறம் இசை, நம்ம இணைய புகழ் yogi.b யோட "எங்கேயும் எப்போதும்" ரீமிக்ஸ் பாட்டுக்கு தியேட்டரே ஆடுது, அப்பறம் தினாவோட ஓபனிங் குத்துபாட்டும் நல்லா தாளம் போட வெச்சுருக்கு, ஆனாலும் g.v.பிரகாஷ் ஓட "மின்னல்கள் கூத்தாடும்" பாட்டும் அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். கார்த்திக் - பாம்பே ஜெயஸ்ரீ குரல் மிக அருமை.சண்டைகாட்சிகளும் இயல்பாக இருக்கிறது.
"அழகிய தமிழ் மகன்" பார்த்து மண்டை காஞ்சு போனவர்கள் இந்த படம் தாராளமாக போகலாம்...கண்டிப்பாக ஏமாற்றாது!!!
3 comments:
OK...naan intha padatha download panni paakalaama paaka vaenaama nu yosichikittu irunthaen.oru nalla report kuduthirukka.athukkaaga vaathu paarthudaraen.mavanae nalla mattum illa!onnum illa.
ok romba naala download panni intha padatha paakrathaa vaendamaa nu yosichikittu irunthaen.nalla report kuduthirukka.Paarthuduraen.Mavanae padam nalla mattum illa!onnum illa.
//
அடடா இவ்ளோ நேரம் படத்தபத்தி பேசிட்டு ஹீரோயின் பத்தி பேசவே இல்லையே. இந்த படத்தோட ஹீரோயின் "திவ்யா" அதாங்க "குத்து" படத்துல நடிச்சாங்களே அந்த "ரம்யா" தான். இந்த படத்துல அவங்க அவ்ளோ அழகு......அதுவும் அவங்க சிரிப்பு இருக்கே வாவ் சோ க்யூட்!!!!!!! இவங்க அடுத்த படம் "வாரணம் ஆயிரம்" எப்படா வரும்னு காத்திருக்கேன்..
//
இது பட விமர்சனம் மாதிரி இல்லியே!!!
:-)))))))))))))
Post a Comment