
இன்றுடன் மும்பை மாநகருக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது!!!!!
சென்னையில் ஒரு சின்ன கம்பெனியில் போட்டி தட்டி கொண்டிருந்த நான் இப்போது மும்பையில் ஒரு பெரிய பன்னர்வ கம்பெனியில்...
என் பழைய கம்பெனியில் அமெரிக்க மேரத்தில் வேலை செய்தாலும், இது மிகவும் பெரிய கம்பெனி என்பதாலும் எவ்வித தயக்கமும் இல்லாமல் மும்பை வந்துவிட்டேன்.
நான் வந்தது ஜூலை மாதம் மும்பையில் மழை மிக அதிகம் இருக்கும் என்று சொன்னார்கள்.அதைபோலவே என் பிளைட்டும் மழை காரணமாக 3 மணிநேரம் தாமதம்.என்னடா இது என்று நொந்து நூடுல்ஸ் ஆகி என் அத்தை வீட்டிற்கு வந்தேன்.இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா நான் சென்னையில் என் நண்பர்களோடு தான் தங்கியிருந்தேன் ஆனால் மும்பையில் என் அதை வீட்டில் தான் தங்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு.
அடுத்த நாளே இங்கு வேலையில் சேரவேண்டும். காலையில் ஒரு டாக்ஸி பிடித்து (அத்தையின் துணையுடன் தான்) அலுவலகம் வந்து சேர்ந்தால் நானும் செச்குரிடியும் தான் வந்துருக்கோம். அப்போ மணி 9:30. என்னடா இது யாரையும் காணோம்னு பார்த்தால் ஆடி அசஞ்சு 10:30 மணிக்கு மேலதான் வராங்க எல்லாம்.
எனக்கு செம குஷி.ஆகா இதுவல்லவோ கம்பெனி னு. எனக்கான ஆப்பு இருந்தது என் கண்ணுக்கு அப்போ தெரியல...
சரி மும்பைய பத்தி எழுத வந்துட்டு எங்கயோ போயிட்டேன் ஸாரி!!!!!!!!
அலுவலகம் வந்ததும் என் கண்ணுல பட்டது என்ன தெரியுமா?
அடுத்த பதிவுல சொல்றேன்!!!!! :)))))))
3 comments:
Me the firstu??
Mumbai is a Great City, no?
I would love to be there...
:)
Karthik,
yes..mumbai is a great city to live...despite language the city rocks :)))
Post a Comment