Showing posts with label Vijay. Show all posts
Showing posts with label Vijay. Show all posts

Tuesday, November 06, 2007

கில்லி போயி பைரவி வந்தது டும் டும் டும்!!!!!!

ஞாயிற்றுகிழமை ஒரு செம காமெடி நடந்தது, அத எத்தனபேரு பாத்தீங்கன்னு தெரியல.அதான் நம்ம சன் டி.விக்கும் கலைஞர் டி.விக்கும் நடந்த "டிஷ்யூம் டிஷ்யூம்" தான் அது.


நான் கொஞ்சம் விரிவாவே சொல்றேன்.




சன் டி.வில சண்டே மத்யானம் திடீர்னு ஒரு நியுஸ் போட்டான், என்னனு பாத்தா "தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா இன்று பகல் 11.30 க்கு காணத்தவராதீர்கள்" அப்படீன்னு. என்னடா இது விருது வழங்கின விழாவ கலைஞர் டி.வி தான் தீபாவளி அன்னிக்கு போடபோராங்களே பின்ன இவங்க எப்படி போடுவாங்கனு பாத்தா கரெக்டா 11.30 க்கு போட்டான்.சரின்னு நம்ம தானைத்தலைவி நமீதாவோட ஆட்டத்த வாயபோலந்து பாத்துட்டே இருந்தேன். அப்பறம் ஏதேச்சயா கலைஞர் டி.வி பக்கம் போனா அங்க நம்ம இளைய தளபதி!!!! "ஆச்சு வூச்சு னு ஓடி வராரு". அடடா கில்லி படம் கலைஞர் டி.வி ல போடறாங்களே னு பாக்க ஒக்காந்துட்டேன். அது எனக்கு ரொம்ப புடிச்ச படம் வேறயா, பயாங்கரமா ரசிச்சு பாத்துட்டு இருந்தேன். ஒரு அறைமணி நேரம் ஓடிச்சு படம் திடீர்னு கில்லி போயி பைரவி படம் வந்துருச்சு, என்னடா இது கொடுமைனு சன் டி.வி போயி நம்ம தலைவியவே பாப்போன்னு போனா அங்கயும் விழா நிகழ்ச்சிய கட் பண்ணிட்டு நந்தா படம் போட்டுட்டான். என்ன பிரச்சனை னு யோசிச்சு யோச்சிசு மண்டை கொழம்பி போச்சு. அப்பறம் நம்ம தோஸ்து ஒருத்தன் தான் எல்லா மேட்டரையும் சொன்னான். அட வெண்ணைகளா ஒங்க சண்டைல ஏண்டா எங்கள போட்டு கொல்றீங்கனு தோணுச்சு.
அவசரகுடுக்க தானமா படத்த போட்டு நல்லா வாங்கி கட்டிகுச்சு சன் டி.வி. என்ன இருந்தாலும் இராஜதந்திரத்தை கரைத்து குடித்தவர் அல்லவா கலைஞர்!!!




பி.கு: படிச்சவுடன் தயவுசெய்து கமெண்ட் எழுதுங்க!!!!!

Thursday, November 01, 2007

என்ன படம் பாக்கலாம் தீபாவளிக்கு!!!

1.அழகிய தமிழ் மகன்
2.பொல்லாதவன்
3.கண்ணாமூச்சி ஏனடா!!
4. வேல்
5. மச்சக்காரன்

1.அழகிய தமிழ் மகன்!!!!

இது நம்ம விஜய் படம்!!!வழக்கமான படமா இல்லாம இருந்தா பாக்கலாம்!!விஜய் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்கும் படம் இது தான்! இந்த படதோட பெறிய ப்ளஸ் ஏ.ஆர்.ரஹ்மான்.பாட்டு எல்லாம் எஃப்.எம் புன்னியத்துல ஹிட்டாயிடுச்சு!!!படம் ஹிட்டாகுமா??

மற்ற படங்கள் பற்றிய பார்வை விரைவில்!!!!!!!!!