George Clooney, இவர தெரியாத ஹாலிவுட் ரசிகர்களே இருக்க முடியாது. ஆர்பாட்டம் இல்லாம நடிக்கறதுல மன்னன். இந்த படம் மட்டும் என்ன விதிவிலக்கா??சும்மா பிச்சு உதறிருக்கார் மனுஷன்.
அப்படி என்னதான்யா கதை???
Matt King (க்ளூனி), ஹவாய் மாகானத்துல இருக்குற Honolulu அப்படின்ற ஒரு கடற்கரை நகரத்துல வாழற ஒரு வக்கீல். இவருடைய குடும்பம் ஒரு பாரம்பரியமான மன்னர் குடும்பம். அந்த வகைல இவர் குடும்பத்துக்கு 25000 ஏக்கர் நிலம் Kaua'i என்ற ஊருல கடலுக்கு பக்கத்துல இருக்கு. அந்த நிலத்தோட trustee இவருதான். ஆனா இவருடைய Cousins கொஞ்சம் பேரு இருக்காங்க அவங்க அனுமதி இல்லாம இவரால தனியா எந்த முடிவும் எடுக்க முடியாது. இவருடைய மனைவி Elizabeth அப்புறம் Alexandra , Scottie ன்னு ரெண்டு பொண்ணுங்க. இவருக்கும் இவரோட மனைவிக்கும் தகராறு. அதனாலேயே இவரு குடும்பத்தோட ஒரு ஒட்டுதல் இல்லாமையே இருக்காரு. இந்த சமயத்துல Elizabeth க்கு ஒரு விபத்துல தலைல அடிபட்டு நினைவிழந்து கோமால இருக்காங்க. அப்போத்தான் இவரோட பெரிய பொண்ணு மூலமா Elizabeth க்கும் அதே ஊருல இருக்கும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் Brian Speer க்கும் தொடர்பு இருந்தது தெரிய வருது. அதுக்கு அப்பறம் இவரு என்ன செஞ்சாரு, அவங்க மனைவி உயிர் பிழைச்சு வந்தாங்களா அப்படீங்கறத நீங்க டவுன்லோட் பண்ணியோ தியேட்டர்ல போய் பார்த்தோ தெரிஞ்சுகோங்க.
க்ளூனி, மணவாழ்க்கையில் தோல்வி அடைஞ்ச மனைவியால் ஏமாற்றப்பட்ட கணவன், பொறுப்பான அப்பா என ரெண்டு விதமான கேரக்டர். தன்னோட கோவத்த மகள்கள் கிட்ட காட்டாம அவங்க செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு அதேசமயம் அவர்களுடைய தவறை அவர்களுக்கு புரியவைத்து வழிநடத்தும் பொறுப்பான அப்பான்னு கலக்கிருக்காரு. இந்த படத்துல வர எல்லாருமே அவ்ளோ அழகா நடிப்புன்னே சொல்லமுடியாதபடி நடிச்சுருக்காங்க. குறிப்பா பெரிய பொண்ணா வர்ற Shailene Woodley அப்புறம் 10 வயசுல வயதொறந்தாலே பன்னீரும் தேனுமா பேசுற Spoilt Child Amara Miller க்லூனிக்கு சமமா செமையா நடிசிருக்குகாங்க இந்த ரெண்டு பொண்ணுங்களும்..
Shailene Woodley |
Amara Miller |
கொஞ்சம் மெதுவா போற படம்தான், ட்விஸ்ட் கிஸட்டு எல்லாம் பெருசா ஒன்னும் கிடையாது ஆனா கண்டிப்பா போரடிக்காம போகும். அதனால கண்டிப்பா பாருங்க.
-சிடிசன்
1 comment:
dai thambi
Post a Comment