Tuesday, March 06, 2012

உ.பி : இரு வாரிசுகள் நடத்தும் போர்


முன்குறிப்பு: 

இந்த பதிவு நான் போனவாரம் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சு draft ல இருந்தது. இப்போ பதிவ முடிச்சு போடறதுக்குள்ள முடிவே தெரிஞ்சு போச்சு :( முலாயம் சிங் தான் அடுத்த முதல்வர், மாயா அக்கா 2nd ,காவி ௩, பழைய கதர் 4 .இருந்தாலும் கஷ்ட்டப்பட்டு இவ்ளோ எழுதினத கொஞ்சம் படிச்சிருங்க ப்ளீஸ் :-)

உத்தரப்ரதேசம், இந்தியாவின் அரசியல்ரீதியாக மிக முக்கியமான மாநிலம். அதன் பரந்து விரிந்த நிலபரப்பும் அதன் மக்கட்தொகையுமே அதற்கு அந்த முக்கியத்துவத்தை கொடுத்துக்கொண்டிருகிறது. அதனால் தான் அம்மாநிலம் இதுவரை 8 பிரதம மந்திரிகளை இந்தியாவிற்கு கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸ் மிக செல்வாக்காக இருந்த மாநிலம். இப்படியான ஒரு மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகள் ஆளபோவது யார் என்பதே இப்போது நாட்டின் முக்காலே மூணுவீசம் ஆட்களின் கேள்வி.அதை நாம் நம் பாணியில் கொஞ்சம் அலசுவோம்.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி கட்சியை இந்த தேர்தலில் கரை சேர்த்துவிடவேண்டும் என்று முழு மூச்சாக களமிறங்கியுள்ளார். அவருக்கு பக்கத்துணையாக அவரது அக்கா பிரியங்கா வதேராவும்??(அவங்க அம்மா சோனியா திருமணத்திற்கு பின் சோனியா காந்தி ஆன மாதிரி இவங்களும்  பிரியங்கா வதேரா ஆரதுதானே முறை :-)) மற்றும் அவர் குடும்பத்தில் உள்ள அனைத்து நண்டு சின்டுகளும் களமிறங்கியுள்ளனர். ஆனா கட்சி இப்போ அங்க இருக்குற நெலமைல அவங்க எல்லாம் என்னதான் தலைகீழ நின்னு தலையால தண்ணி குடிச்சாலும் ஒன்னும் தேறாது போல.

பி.ஜே.பி:

இவங்களும் கிட்டத்தட்ட காங்கிரஸ் நெலமைலதான் இருக்காங்க. என்ன இவங்களுக்கு ஒரு ஆறுதல்னா..எப்படியும் 3 இல்ல 4 இடம் தான் வருவோம்னு    அவங்களுக்கே நல்ல தெரியும் அதனால பெருசா ஒன்னும் எதிர்பாகல அவங்க. ஆனா காங்கிரச விட ஒரு செஅட் ஆவது கூட வாங்கனும்னு துடிக்கிறாங்க. அப்போத்தான் 2014 தேர்தல்ல கூட்டணி போட
கட்சிகள் வரும். பாப்போம் இவங்க கதை என்ன ஆகுதுன்னு.


பி.எஸ்.பி:


பஹுஜன் சமாஜ், இதான் இப்போ அங்க ஆளுங்கட்சி. மாயாவதி தான் முதல்வர். அசுர பலத்தோட இந்த தேர்தல சந்திகிறாங்க. அரசாங்க பலம், பண பலம் எல்லாம் இவங்க கிட்ட இருக்கு.ஆனா மக்கள் பலம்??? தலித் மக்கள் ஓட்ட வெச்சு கரை சேர்ந்துரலாம்னு பாக்குறாங்க. சாகபோற நேரத்துல சங்கர சங்கராங்கர மாதிரி, கட்ட கடைசில ஒரு 3 மந்திரிங்கள கட்சிய விட்டு நீக்கினாங்க. ஊழலுக்கு எதிரான நடவடிக்கயாமா. சிரிப்பு வரல??மாநிலத்தையே 4 பிரிக்கணும்னு அடுத்த குண்டு போட்டாங்க. ஆனா இதுக்கு அவ்வளவா ஆதரவு இல்ல.தன்னோட சிலை தன்னோட கட்சி சின்னம் (யானை) சிலை வெச்சத தவிர சொல்றமாதிரி ஒன்னும் பண்ணல. இந்த முறை மாயா அக்கா ஜெயிகலன்னா அவங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்.


எஸ்.பி


சமாஜ்வாடி பார்ட்டி, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச முலாயம் சிங் யாதவ் தான் தலைவர், இவரோட மகன் அகிலேஷ் குமார் யாதவ் தான் அங்க அப்பாவ ஜெயிக்க வைக்க களமிறங்கி இருக்கார். அங்க நடந்த பிரசாரத்துல ராகுல் காந்திக்கும் இவருக்கம் நடந்த போட்டா போட்டி தான் செம சுவாரசியம். ராகுல் காந்திய செம ஓட்டு ஒட்டி கைதட்டல் வாங்கினார். அவருக்கு நிகரா சூறாவளி பிரசாரம் பண்ணார். அப்பவ ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கசொல்லிட்டு கட்சிய தானே வழிநடத்தினார். அதுல ஜெயிச்சாத்தான் இவருக்கு அரசியல் எதிர்காலம். ஜெயிப்பாரா???


-சிடிசன் :-)

No comments: