Tuesday, November 13, 2007
உன்னோடு நான் இருந்த..........
"இருவர்" படமும் பாடல்களும் எத்தனை பேர் பார்த்து கேட்டுருப்பீர்கள் என்று தெரியவில்லை. படமும் பாட்டும் மிக அழகாக இருக்கும். அதில் எனக்கு மிகவும் பிடித்தது படத்தில் வரும் இந்த கவிதை. வைரமுத்துவின் வைர வரிகளில் அட்டகாசமான கவிதை.
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!!!!
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைதைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி!!
பார்வையிலே சில நிமிடம்,
பயத்தோடு சில நிமிடம்,
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்,
இலக்கணமே பாராமல்..
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்,
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!!!!
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதைப்பற்றி அறியவில்லை
யார் தொடங்கி? யார் முடிக்க?ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் களைந்தேன் ஆசையினை நீயனைத்தாய்!
ஆடை களைந்தேன் வெக்கத்தை நீயனைத்தாய்!
கண்டதிருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர்....
கையில் இன்னும் ஒட்டுதடி!!!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!!!! (2)
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!
Labels:
இருவர்,
ஐஸ்வர்யாராய்,
தபு,
பிரகாஷ்ராஜ்,
மணிரத்தினம்,
மோகன்லால்,
ரேவதி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Me too like it very much.
"Thanks for quoting"
Post a Comment