Wednesday, November 14, 2007

நீரழிவு நோயில் இந்தியா முதலிடம்??






கடந்த சில வருடங்களாக இந்தியாவில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில் சென்றால் இந்தியா இன்னும் சில வருடங்களில் முதலிடம் பிடிக்கும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 மில்லியன்களாகும்.
நாம் நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவந்தால் இதை தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.




அது பற்றி பார்ப்போம்..


1. முதலில் junk foods எனப்படும் சாப்பாடு வகைகளை உண்பதை குறைக்க வேண்டும்.


2. காலையில் எழுந்ததும் சிறிது தூரம் நடைப்பயிற்சியோ அல்லது உடற்ப்பயிற்சியோ மேற்க்கொள்ளவேண்டும்.


3. 2 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக இரத்தப்பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


இந்த இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள நீங்கள் பரிசோதனை மையத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இப்போது இல்லை. நம் இரத்தத்தில் குளுகோஸ் அளவை காட்டும் கருவி இப்போது வந்துவிட்டது. விலை 1500 ரூபாய். அதை வாங்கி வைத்துக்கொள்வது நலம். இல்லை நம் வீட்டில் நம் அம்மா, அப்பா விற்கு இதை வாங்கி கொடுக்கலாம். வழிமுறைகளும் மிகவும் சுலபம்.


நீரழிவு நோயின் அறிகுறிகள்:



1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்


2. எடை குறைதல்


3. தாகம் எடுத்தல்


4. காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருத்தல்.


5. சிலருக்கு கண் பார்வை மங்குதல்.



நோய் வருவதை நம்மால் தடுக்க முடியாது ஆனால் தள்ளிபோடலாமே!!!!மேற்சொன்ன வழிமுறைகளை பின்ப்பற்றி இந்த நோயை தள்ளிபோடுவோம் முடிந்தால் விரட்டுவோம்!!!!





கடைசி செய்தி :

இப்போது நீரழிவு நோய்காக இந்தியாவில் ஒரு புதிய மருந்து கண்டுபிடித்துள்ளனர்.அதன் பெயர் Exenatide. இந்த மருந்து நம் உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி அதிகம் சுரக்க செய்கிறது. இந்த மருந்தின் தாக்கம் 12 மணிநேரம் இருக்குமாம். இது அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1 comment:

மங்களூர் சிவா said...

நல்ல தகவல் பயனுள்ள பதிவு.