Saturday, July 28, 2012

Tuesday, March 06, 2012

The Descendants (2011) - English


George Clooney, இவர தெரியாத ஹாலிவுட் ரசிகர்களே இருக்க முடியாது. ஆர்பாட்டம் இல்லாம நடிக்கறதுல மன்னன். இந்த படம் மட்டும் என்ன விதிவிலக்கா??சும்மா பிச்சு உதறிருக்கார் மனுஷன்.


அப்படி என்னதான்யா கதை???


Matt King (க்ளூனி), ஹவாய் மாகானத்துல இருக்குற  Honolulu  அப்படின்ற ஒரு கடற்கரை நகரத்துல வாழற ஒரு வக்கீல். இவருடைய குடும்பம் ஒரு பாரம்பரியமான மன்னர் குடும்பம். அந்த வகைல இவர் குடும்பத்துக்கு 25000 ஏக்கர் நிலம் Kaua'i என்ற ஊருல கடலுக்கு பக்கத்துல இருக்கு. அந்த நிலத்தோட trustee இவருதான். ஆனா இவருடைய Cousins கொஞ்சம் பேரு இருக்காங்க அவங்க அனுமதி இல்லாம இவரால தனியா எந்த முடிவும் எடுக்க முடியாது. இவருடைய மனைவி Elizabeth அப்புறம் Alexandra , Scottie ன்னு ரெண்டு பொண்ணுங்க. இவருக்கும் இவரோட மனைவிக்கும் தகராறு. அதனாலேயே இவரு குடும்பத்தோட ஒரு ஒட்டுதல் இல்லாமையே இருக்காரு. இந்த சமயத்துல Elizabeth க்கு ஒரு விபத்துல தலைல அடிபட்டு நினைவிழந்து கோமால இருக்காங்க. அப்போத்தான் இவரோட பெரிய பொண்ணு மூலமா Elizabeth க்கும் அதே ஊருல இருக்கும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் Brian Speer க்கும் தொடர்பு இருந்தது தெரிய வருது. அதுக்கு அப்பறம் இவரு என்ன செஞ்சாரு, அவங்க மனைவி உயிர் பிழைச்சு வந்தாங்களா அப்படீங்கறத நீங்க டவுன்லோட் பண்ணியோ தியேட்டர்ல போய் பார்த்தோ தெரிஞ்சுகோங்க.


க்ளூனி, மணவாழ்க்கையில் தோல்வி அடைஞ்ச மனைவியால் ஏமாற்றப்பட்ட கணவன், பொறுப்பான அப்பா என ரெண்டு விதமான கேரக்டர். தன்னோட கோவத்த மகள்கள் கிட்ட காட்டாம அவங்க செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு அதேசமயம் அவர்களுடைய தவறை அவர்களுக்கு புரியவைத்து வழிநடத்தும் பொறுப்பான அப்பான்னு கலக்கிருக்காரு. இந்த படத்துல வர எல்லாருமே அவ்ளோ அழகா நடிப்புன்னே சொல்லமுடியாதபடி நடிச்சுருக்காங்க. குறிப்பா பெரிய பொண்ணா வர்ற Shailene Woodley  அப்புறம் 10 வயசுல வயதொறந்தாலே பன்னீரும் தேனுமா பேசுற Spoilt Child Amara Miller க்லூனிக்கு சமமா செமையா நடிசிருக்குகாங்க  இந்த ரெண்டு பொண்ணுங்களும்..
Shailene Woodley
Amara Miller
 இந்த படம் இதே பேருல வந்த ஒரு நாவல மையமா வெச்சு எடுக்கப்பட்டது. எழுதி இயக்கினவரு Alexander Payne .  இவரு ஏற்கனவே Sideways படத்துக்கு ஆஸ்கார் வாங்கினவரு. இந்த படத்துக்கு  "Best Adapted Screenplay " விருது இவருக்கும் இவரோட திரைக்கதை எழுதின Nat Faxon & Jim Rash க்கும் இந்த வருஷம் கிடைச்சுருக்கு. Best Actor க்லூனிக்கு கிடைகும்ம்னு கொஞ்சம் பேரு சொன்னாங்க ஆனா பாவம் அவருக்கு மிஸ் ஆயிடுச்சு 


கொஞ்சம் மெதுவா போற படம்தான், ட்விஸ்ட் கிஸட்டு எல்லாம் பெருசா ஒன்னும் கிடையாது ஆனா கண்டிப்பா போரடிக்காம போகும். அதனால கண்டிப்பா பாருங்க. 

-சிடிசன் 

உ.பி : இரு வாரிசுகள் நடத்தும் போர்


முன்குறிப்பு: 

இந்த பதிவு நான் போனவாரம் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சு draft ல இருந்தது. இப்போ பதிவ முடிச்சு போடறதுக்குள்ள முடிவே தெரிஞ்சு போச்சு :( முலாயம் சிங் தான் அடுத்த முதல்வர், மாயா அக்கா 2nd ,காவி ௩, பழைய கதர் 4 .இருந்தாலும் கஷ்ட்டப்பட்டு இவ்ளோ எழுதினத கொஞ்சம் படிச்சிருங்க ப்ளீஸ் :-)

உத்தரப்ரதேசம், இந்தியாவின் அரசியல்ரீதியாக மிக முக்கியமான மாநிலம். அதன் பரந்து விரிந்த நிலபரப்பும் அதன் மக்கட்தொகையுமே அதற்கு அந்த முக்கியத்துவத்தை கொடுத்துக்கொண்டிருகிறது. அதனால் தான் அம்மாநிலம் இதுவரை 8 பிரதம மந்திரிகளை இந்தியாவிற்கு கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸ் மிக செல்வாக்காக இருந்த மாநிலம். இப்படியான ஒரு மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகள் ஆளபோவது யார் என்பதே இப்போது நாட்டின் முக்காலே மூணுவீசம் ஆட்களின் கேள்வி.அதை நாம் நம் பாணியில் கொஞ்சம் அலசுவோம்.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி கட்சியை இந்த தேர்தலில் கரை சேர்த்துவிடவேண்டும் என்று முழு மூச்சாக களமிறங்கியுள்ளார். அவருக்கு பக்கத்துணையாக அவரது அக்கா பிரியங்கா வதேராவும்??(அவங்க அம்மா சோனியா திருமணத்திற்கு பின் சோனியா காந்தி ஆன மாதிரி இவங்களும்  பிரியங்கா வதேரா ஆரதுதானே முறை :-)) மற்றும் அவர் குடும்பத்தில் உள்ள அனைத்து நண்டு சின்டுகளும் களமிறங்கியுள்ளனர். ஆனா கட்சி இப்போ அங்க இருக்குற நெலமைல அவங்க எல்லாம் என்னதான் தலைகீழ நின்னு தலையால தண்ணி குடிச்சாலும் ஒன்னும் தேறாது போல.

பி.ஜே.பி:

இவங்களும் கிட்டத்தட்ட காங்கிரஸ் நெலமைலதான் இருக்காங்க. என்ன இவங்களுக்கு ஒரு ஆறுதல்னா..எப்படியும் 3 இல்ல 4 இடம் தான் வருவோம்னு    அவங்களுக்கே நல்ல தெரியும் அதனால பெருசா ஒன்னும் எதிர்பாகல அவங்க. ஆனா காங்கிரச விட ஒரு செஅட் ஆவது கூட வாங்கனும்னு துடிக்கிறாங்க. அப்போத்தான் 2014 தேர்தல்ல கூட்டணி போட
கட்சிகள் வரும். பாப்போம் இவங்க கதை என்ன ஆகுதுன்னு.


பி.எஸ்.பி:


பஹுஜன் சமாஜ், இதான் இப்போ அங்க ஆளுங்கட்சி. மாயாவதி தான் முதல்வர். அசுர பலத்தோட இந்த தேர்தல சந்திகிறாங்க. அரசாங்க பலம், பண பலம் எல்லாம் இவங்க கிட்ட இருக்கு.ஆனா மக்கள் பலம்??? தலித் மக்கள் ஓட்ட வெச்சு கரை சேர்ந்துரலாம்னு பாக்குறாங்க. சாகபோற நேரத்துல சங்கர சங்கராங்கர மாதிரி, கட்ட கடைசில ஒரு 3 மந்திரிங்கள கட்சிய விட்டு நீக்கினாங்க. ஊழலுக்கு எதிரான நடவடிக்கயாமா. சிரிப்பு வரல??மாநிலத்தையே 4 பிரிக்கணும்னு அடுத்த குண்டு போட்டாங்க. ஆனா இதுக்கு அவ்வளவா ஆதரவு இல்ல.தன்னோட சிலை தன்னோட கட்சி சின்னம் (யானை) சிலை வெச்சத தவிர சொல்றமாதிரி ஒன்னும் பண்ணல. இந்த முறை மாயா அக்கா ஜெயிகலன்னா அவங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்.


எஸ்.பி


சமாஜ்வாடி பார்ட்டி, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச முலாயம் சிங் யாதவ் தான் தலைவர், இவரோட மகன் அகிலேஷ் குமார் யாதவ் தான் அங்க அப்பாவ ஜெயிக்க வைக்க களமிறங்கி இருக்கார். அங்க நடந்த பிரசாரத்துல ராகுல் காந்திக்கும் இவருக்கம் நடந்த போட்டா போட்டி தான் செம சுவாரசியம். ராகுல் காந்திய செம ஓட்டு ஒட்டி கைதட்டல் வாங்கினார். அவருக்கு நிகரா சூறாவளி பிரசாரம் பண்ணார். அப்பவ ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கசொல்லிட்டு கட்சிய தானே வழிநடத்தினார். அதுல ஜெயிச்சாத்தான் இவருக்கு அரசியல் எதிர்காலம். ஜெயிப்பாரா???


-சிடிசன் :-)

Monday, March 05, 2012

ரீ-என்ட்ரி!!!

நான் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா ஒண்ணுமே எழுதல.சரி ரொம்ப நாள் ஆச்சே மறுபடியும் ஆட்டத்த ஆரம்பிக்கலாம்னு தோணிச்சு. அதான் template எல்லாம் மாத்தி புதுசா வந்தாச்சு. இனிமே நாடு நடப்பு, சினிமா, அரசியல் பத்தி எல்லாம்  தொடர்ந்து எழுதலாம்னு இருக்கேன். பாப்போம் :)