Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Tuesday, March 06, 2012

உ.பி : இரு வாரிசுகள் நடத்தும் போர்


முன்குறிப்பு: 

இந்த பதிவு நான் போனவாரம் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சு draft ல இருந்தது. இப்போ பதிவ முடிச்சு போடறதுக்குள்ள முடிவே தெரிஞ்சு போச்சு :( முலாயம் சிங் தான் அடுத்த முதல்வர், மாயா அக்கா 2nd ,காவி ௩, பழைய கதர் 4 .இருந்தாலும் கஷ்ட்டப்பட்டு இவ்ளோ எழுதினத கொஞ்சம் படிச்சிருங்க ப்ளீஸ் :-)

உத்தரப்ரதேசம், இந்தியாவின் அரசியல்ரீதியாக மிக முக்கியமான மாநிலம். அதன் பரந்து விரிந்த நிலபரப்பும் அதன் மக்கட்தொகையுமே அதற்கு அந்த முக்கியத்துவத்தை கொடுத்துக்கொண்டிருகிறது. அதனால் தான் அம்மாநிலம் இதுவரை 8 பிரதம மந்திரிகளை இந்தியாவிற்கு கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸ் மிக செல்வாக்காக இருந்த மாநிலம். இப்படியான ஒரு மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகள் ஆளபோவது யார் என்பதே இப்போது நாட்டின் முக்காலே மூணுவீசம் ஆட்களின் கேள்வி.அதை நாம் நம் பாணியில் கொஞ்சம் அலசுவோம்.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி கட்சியை இந்த தேர்தலில் கரை சேர்த்துவிடவேண்டும் என்று முழு மூச்சாக களமிறங்கியுள்ளார். அவருக்கு பக்கத்துணையாக அவரது அக்கா பிரியங்கா வதேராவும்??(அவங்க அம்மா சோனியா திருமணத்திற்கு பின் சோனியா காந்தி ஆன மாதிரி இவங்களும்  பிரியங்கா வதேரா ஆரதுதானே முறை :-)) மற்றும் அவர் குடும்பத்தில் உள்ள அனைத்து நண்டு சின்டுகளும் களமிறங்கியுள்ளனர். ஆனா கட்சி இப்போ அங்க இருக்குற நெலமைல அவங்க எல்லாம் என்னதான் தலைகீழ நின்னு தலையால தண்ணி குடிச்சாலும் ஒன்னும் தேறாது போல.

பி.ஜே.பி:

இவங்களும் கிட்டத்தட்ட காங்கிரஸ் நெலமைலதான் இருக்காங்க. என்ன இவங்களுக்கு ஒரு ஆறுதல்னா..எப்படியும் 3 இல்ல 4 இடம் தான் வருவோம்னு    அவங்களுக்கே நல்ல தெரியும் அதனால பெருசா ஒன்னும் எதிர்பாகல அவங்க. ஆனா காங்கிரச விட ஒரு செஅட் ஆவது கூட வாங்கனும்னு துடிக்கிறாங்க. அப்போத்தான் 2014 தேர்தல்ல கூட்டணி போட
கட்சிகள் வரும். பாப்போம் இவங்க கதை என்ன ஆகுதுன்னு.


பி.எஸ்.பி:


பஹுஜன் சமாஜ், இதான் இப்போ அங்க ஆளுங்கட்சி. மாயாவதி தான் முதல்வர். அசுர பலத்தோட இந்த தேர்தல சந்திகிறாங்க. அரசாங்க பலம், பண பலம் எல்லாம் இவங்க கிட்ட இருக்கு.ஆனா மக்கள் பலம்??? தலித் மக்கள் ஓட்ட வெச்சு கரை சேர்ந்துரலாம்னு பாக்குறாங்க. சாகபோற நேரத்துல சங்கர சங்கராங்கர மாதிரி, கட்ட கடைசில ஒரு 3 மந்திரிங்கள கட்சிய விட்டு நீக்கினாங்க. ஊழலுக்கு எதிரான நடவடிக்கயாமா. சிரிப்பு வரல??மாநிலத்தையே 4 பிரிக்கணும்னு அடுத்த குண்டு போட்டாங்க. ஆனா இதுக்கு அவ்வளவா ஆதரவு இல்ல.தன்னோட சிலை தன்னோட கட்சி சின்னம் (யானை) சிலை வெச்சத தவிர சொல்றமாதிரி ஒன்னும் பண்ணல. இந்த முறை மாயா அக்கா ஜெயிகலன்னா அவங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்.


எஸ்.பி


சமாஜ்வாடி பார்ட்டி, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச முலாயம் சிங் யாதவ் தான் தலைவர், இவரோட மகன் அகிலேஷ் குமார் யாதவ் தான் அங்க அப்பாவ ஜெயிக்க வைக்க களமிறங்கி இருக்கார். அங்க நடந்த பிரசாரத்துல ராகுல் காந்திக்கும் இவருக்கம் நடந்த போட்டா போட்டி தான் செம சுவாரசியம். ராகுல் காந்திய செம ஓட்டு ஒட்டி கைதட்டல் வாங்கினார். அவருக்கு நிகரா சூறாவளி பிரசாரம் பண்ணார். அப்பவ ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கசொல்லிட்டு கட்சிய தானே வழிநடத்தினார். அதுல ஜெயிச்சாத்தான் இவருக்கு அரசியல் எதிர்காலம். ஜெயிப்பாரா???


-சிடிசன் :-)

Tuesday, December 25, 2007

மாவீரன் நரேந்திர மோடி!!!!!!!!!



நாடே எதிர்ப்பார்த்த குஜராத் மாநில தேர்தல் முடிந்து நாட்டில் உள்ள அனைத்து மீடியா மற்றும் எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படும் நரேந்திர மோடி மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்றார்.


ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று குஜராத்தின் மன்னராக வலம்வரும் மாவீரன் மோடிக்கு என் வந்தனம்!!!


கடந்த 6 வருடங்களில் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 3% அதிகரித்து உள்ளது. இது இந்தியாவின் எந்த மாநில முதல்வரும் தன் மாநிலத்தை இந்த அளவு உயர்த்தியதில்லை. தற்பொழுது குஜராத்தின் மொத்த வளர்ச்சி விகிதம் 11.5 சதவிகிதம்.


இவ்வளவு செய்துள்ள ஒரு முதல்வரை எதிர்க்க காங்கரஸ் மற்றும் சில அறிவுஜீவி பத்திரிகைகாரர்களுக்கு வேறு எந்த விஷயமும் இல்லாத காரணத்தால் "புளித்து போன" இந்துத்த்வா கோஷத்தை கையிலெடுத்தார்கள். ஆனால் குஜராத் மக்கள் மிகவும் புத்திசாலிகள் தங்கள் மாநில வளர்ச்சிக்கு யார் காரணம் மற்றும் யார் வந்தால் இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெரும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவெடுத்துள்ளார்கள்.


இனியாவது காங்கரஸ், கம்யுனிஸ்ட்கள் எல்லாம் மோடியை கரித்து கொட்டிகொண்டே இருக்காமல் அவரிடம் நிர்வாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.முதல்வன் படத்தில் சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார் " அடுத்தவன எப்படி கவுகரதுன்னு செலவழிக்கிற மூளைல ஒரு கால் பங்கு நாட்டுக்கு என்ன பண்ணலாம்னு செலவழிச்சா நம்ம நாடு என்னிக்கோ முன்னேரிருக்கும்"இந்த வசனம் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பொருந்தும்.


சரி இந்த தேர்தலில் மோடி தோற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?


1 . காங்கிரஸ் இது மதவாதிகளுக்கு குஜராத் மக்கள் அடித்த சாவுமணி என்று அறிக்கை விடுக்கும்.


2. கம்யுனிஸ்ட்களின் வெத்து மிரட்டலுக்கு அஞ்சாமல் தனகிருக்கும் செல்வாக்கை மனதில்கொண்டு செயல்பட்டிருக்கும்.


3. ராகுல்காந்தி ஒரு சிறந்த தலைவராக வளர்ந்திருப்பார். அடுத்த மக்களவை தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுருக்கும்.


நாம் செய்த புண்ணியம், இந்த கொடுமைஎல்லாம் நடக்காமல் நம்மை காப்பாற்றிய குஜராத்திகளுக்கு நாம் நிச்சயம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!!!


அனைத்திலும் பெரிய காமெடி என்னன்னா அது ராகுல்காந்தி தான். பாவம் அவர் பிரசாரம் பண்ணிய உ.பி, குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் அடைந்தது படு தோல்வி!!!!! இது ராகுலின் பப்பு இனிமேல் வேகாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பாவம் ராகுலின் நிலைமை இப்போது சற்று கலவரம் தான்!!!