Tuesday, December 25, 2007

மாவீரன் நரேந்திர மோடி!!!!!!!!!



நாடே எதிர்ப்பார்த்த குஜராத் மாநில தேர்தல் முடிந்து நாட்டில் உள்ள அனைத்து மீடியா மற்றும் எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படும் நரேந்திர மோடி மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்றார்.


ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று குஜராத்தின் மன்னராக வலம்வரும் மாவீரன் மோடிக்கு என் வந்தனம்!!!


கடந்த 6 வருடங்களில் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 3% அதிகரித்து உள்ளது. இது இந்தியாவின் எந்த மாநில முதல்வரும் தன் மாநிலத்தை இந்த அளவு உயர்த்தியதில்லை. தற்பொழுது குஜராத்தின் மொத்த வளர்ச்சி விகிதம் 11.5 சதவிகிதம்.


இவ்வளவு செய்துள்ள ஒரு முதல்வரை எதிர்க்க காங்கரஸ் மற்றும் சில அறிவுஜீவி பத்திரிகைகாரர்களுக்கு வேறு எந்த விஷயமும் இல்லாத காரணத்தால் "புளித்து போன" இந்துத்த்வா கோஷத்தை கையிலெடுத்தார்கள். ஆனால் குஜராத் மக்கள் மிகவும் புத்திசாலிகள் தங்கள் மாநில வளர்ச்சிக்கு யார் காரணம் மற்றும் யார் வந்தால் இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெரும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவெடுத்துள்ளார்கள்.


இனியாவது காங்கரஸ், கம்யுனிஸ்ட்கள் எல்லாம் மோடியை கரித்து கொட்டிகொண்டே இருக்காமல் அவரிடம் நிர்வாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.முதல்வன் படத்தில் சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார் " அடுத்தவன எப்படி கவுகரதுன்னு செலவழிக்கிற மூளைல ஒரு கால் பங்கு நாட்டுக்கு என்ன பண்ணலாம்னு செலவழிச்சா நம்ம நாடு என்னிக்கோ முன்னேரிருக்கும்"இந்த வசனம் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பொருந்தும்.


சரி இந்த தேர்தலில் மோடி தோற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?


1 . காங்கிரஸ் இது மதவாதிகளுக்கு குஜராத் மக்கள் அடித்த சாவுமணி என்று அறிக்கை விடுக்கும்.


2. கம்யுனிஸ்ட்களின் வெத்து மிரட்டலுக்கு அஞ்சாமல் தனகிருக்கும் செல்வாக்கை மனதில்கொண்டு செயல்பட்டிருக்கும்.


3. ராகுல்காந்தி ஒரு சிறந்த தலைவராக வளர்ந்திருப்பார். அடுத்த மக்களவை தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுருக்கும்.


நாம் செய்த புண்ணியம், இந்த கொடுமைஎல்லாம் நடக்காமல் நம்மை காப்பாற்றிய குஜராத்திகளுக்கு நாம் நிச்சயம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!!!


அனைத்திலும் பெரிய காமெடி என்னன்னா அது ராகுல்காந்தி தான். பாவம் அவர் பிரசாரம் பண்ணிய உ.பி, குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் அடைந்தது படு தோல்வி!!!!! இது ராகுலின் பப்பு இனிமேல் வேகாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பாவம் ராகுலின் நிலைமை இப்போது சற்று கலவரம் தான்!!!

Friday, December 21, 2007

பில்லா - விமர்சனம்







சூப்பர் ஸ்டார் நடித்து 1979 ல் வெளிவந்து பெருவெற்றி பெற்ற "பில்லா" எனும் படம் இப்பொழுது அல்டிமேட் ஸ்டார் நடிப்பில் புதுப்பொலிவுடன் "பில்லா 2007" ஆக வெளிவந்துள்ளது. பூஜை போட்ட நாள் முதலே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பிய படம் இது. போன மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து அந்த எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கின. தல வேறு கலைஞர் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து தன் பங்கிற்கு திரி கொளுத்தி விட்டார். இவை எல்லாம் சேர்ந்து என்னை இப்படத்தை முதல் நாளே பார்க்க வைத்தது.


இனி விமர்சனம்!!!


படத்தின் கதை நமக்கெல்லாம் ஏற்கனவே நன்கு தெரிந்ததுதான். அதனால் நான் கதைக்குள் போகவில்லை. சூப்பர் ஸ்டார் ஏற்று நடித்த கதப்பாதிரத்தை ஏற்க மிகுந்த தைரியம் வேண்டும்.அது அஜித்திடம் நிறையவே இருக்கிறது. படம் முழுக்கவே அஜித்தின் அட்டகாசம் தான். அவர் கோட் சூட் போட்டு நடந்து வருவதாகட்டும் தலையை சாய்த்து பார்ப்பதாகட்டும் ஆகா ஆகா தல பிரிச்சு மேஞ்சிருக்கார்!!


பில்லாவை விட வேலு க்கு வேலை கம்மி தான், ஆனாலும் இந்த வேடத்தில் தல காமெடியும் நன்றாக செய்துள்ளார்..


அடுத்தது நம்ம நயன்தாரா!!!!! அவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. அழகை காட்டி சும்மா அதிரவைக்கிறார். அவரை பார்த்து என் நண்பன் சொன்னது " சிம்பு அநியாயத்துக்கு வேஸ்ட் பண்ணிடாண்டா" :)))நயன்தாரா முன் நமீதா "ஆயிரம் வாட்ஸ்" பல்பு முன் "0 வாட்ஸ்" பல்பு மாதிரி அமுங்கி போய்டாங்க.


பிரபு தன் வேலையை மிக சரியாக செய்துள்ளார், அதைப்போலவே ரகுமானும்.படம் முழுக்கவே இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. படத்தின் போக்கிற்கு மிகவும் உதவுவது "நீரவ் ஷா" வின் ஒளிப்பதிவும் "யுவனின்" பின்னணி இசையும்.அதிலும் அந்த கார் சேசிங் காட்சியில் இருவரும் கைதட்டல் பெறுகிறார்கள்.அடுத்ததாக உடை அலங்காரம் "அணு வர்தன்" அனைவருக்கும் மிக பொருத்தமாக உடைகளை வடிவமைத்துள்ளார்.


"பில்லா 2007" அஜித் விஷ்ணு வாழ்வில் ஒரு மைல்கல்!!!!!!! இதற்கு மேல் அழகாக வேகமாக இதுவரை எந்த படமும் வரவில்லை, வருங்காலத்தில் வந்தாலும் அதில் இப்படத்தின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.


பஞ்ச் : தில்லா வந்து நல்லா கல்லா கட்டும் "பில்லா"

Wednesday, November 28, 2007

ஒரு மின்னஞ்சல்(mail) படிக்க 1 ரூபாய் தராங்களாம்!!!!!

ஒரு மின்னஞ்சல்(mail) படிக்க 1 ரூபாய் தராங்களாம், இங்க கிளிக் பண்ணுங்க மேல் விவரங்கள் தெரியும்...நானும் இப்போதான் சேர்ந்துருக்கேன். சேர்றதுக்கு காசு எதுவும் இல்ல free தான்...நம்ம கணக்குல Rs.200 வந்தா செக் அனுப்பி வெப்பாங்கலாம்....பாப்போம்...

பி.கு: இதுல சேர்ந்து காசு எதுவும் வரலேன்னா என்ன கேக்காதீங்க!!!! அம்புடுதேன்!!!

Saturday, November 24, 2007

பொல்லாதவன் - விமர்சனம்



மத்த ரெண்டு தீபாவளி படங்களும் பாத்தாச்சுங்கரதுனால இந்த படம் பாக்கணும்னு ரெண்டு வாரமா நெனச்சு நேத்து எனக்கு ஆபீஸ்ல off குடுத்ததுனால காசி தியேட்டர் ல படம் பாக்க போயிட்டேன். இந்த படம் பத்தி எல்லாரும் நல்லவிதமா சொல்லி எழுதி இருந்ததும் ஒரு காரணம். நல்லவேளை நம்மள ஏமாத்தாம ஒரு படம் குடுத்துருக்கார் இயக்குனர் வெற்றிமாறன்!!! நல்ல முயற்சி!!!



இந்த படத்துல பைக் தன் ஹீரோ...ஆமா அத சுத்திதான் கதையே!!!இதுவே நமக்கு புதுசுதான்!!! ஹீரோ(தனுஷ்) வெட்டியா ஊரசுத்துறது பிடிக்காம ஒரு கட்டத்துல அவர் அப்பா ஒரு 70,000/- ரூபாய் குடுத்து பொழசுக்க சொல்றாரு. ஆனா தனுஷ் தன்னுடைய நீண்டநாள் ஆசையான ஒரு பைக் வாங்கறாரு. வீட்டுல திட்டுவிழ தனுஷ் அந்த பைக்க வெச்சே ஒரு வேல தேடிக்கறார். அதுக்கு அப்பறம் அவர் வாழ்க்கைல ஏகப்பட்ட நல்லவிஷயங்கள் நடக்குது. அவர் ஒருதலையா காதலிச்ச பொண்ணு அவர லவ் பண்றா, வீட்டுலயும் மரியாத கூடுது. இப்படி வாழ்க்கை சந்தோஷமா பொகும்போது அவரோட அந்த பைக் திருடு போய்டுது.அத கண்டுபுடிக்க போகும்போது என்னனென்ன பிரச்சனைகள் வருது அத அவர் எப்படி face பண்றார் இதான் படம்.



இப்படி ஒரு கதைய எடுத்து அத கொஞ்சம் கூட போர் அடிக்காம குடுத்ததுக்காகவே வெற்றிமாரனை எவ்வளவு வேணுமானாலும் பாராட்டலாம்.இந்த படத்தில் என்னை மிகவும் கவர்வது ரவுடி கூட்டத்தின் தலைவனாக வரும் "கிஷோர்" என்பவரின் பாத்திரமும் அவரின் மிக இயல்பான நடிப்பும். அவருக்கு இதுதான் முதல் படமா இல்லை வேறு மொழிகளில் ஏதாவது நடித்துருக்கிரரானு தெரியல. யாரவது தெரிஞ்சா சொல்லுங்க. அப்பறம் தனுஷ், அவரு அலட்டிக்காம அசால்டா நடிச்சுருக்காரு. அதுலயும் அந்த மருத்துவமனை காட்சி, தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் வளர்கிறார் என்று காட்டுகிறது.

அடடா இவ்ளோ நேரம் படத்தபத்தி பேசிட்டு ஹீரோயின் பத்தி பேசவே இல்லையே. இந்த படத்தோட ஹீரோயின் "திவ்யா" அதாங்க "குத்து" படத்துல நடிச்சாங்களே அந்த "ரம்யா" தான். இந்த படத்துல அவங்க அவ்ளோ அழகு......அதுவும் அவங்க சிரிப்பு இருக்கே வாவ் சோ க்யூட்!!!!!!! இவங்க அடுத்த படம் "வாரணம் ஆயிரம்" எப்படா வரும்னு காத்திருக்கேன்..


அப்பறம் டேனியல் பாலாஜி, அவருக்கு யாராவது வேறு ஒரு ரோல் குடுங்கப்பா??அவர் அண்ணியாக வருவது "அஞ்சு"வாம் "ஆயிரத்து அஞ்சு" மாதிரி இருக்கிறார்.


எடிட்டிங் v.t.விஜயன், அவருடைய அனுபவம் இந்த படத்துக்கு ரொம்ப உதவிருக்கு. அப்பறம் இசை, நம்ம இணைய புகழ் yogi.b யோட "எங்கேயும் எப்போதும்" ரீமிக்ஸ் பாட்டுக்கு தியேட்டரே ஆடுது, அப்பறம் தினாவோட ஓபனிங் குத்துபாட்டும் நல்லா தாளம் போட வெச்சுருக்கு, ஆனாலும் g.v.பிரகாஷ் ஓட "மின்னல்கள் கூத்தாடும்" பாட்டும் அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். கார்த்திக் - பாம்பே ஜெயஸ்ரீ குரல் மிக அருமை.சண்டைகாட்சிகளும் இயல்பாக இருக்கிறது.



"அழகிய தமிழ் மகன்" பார்த்து மண்டை காஞ்சு போனவர்கள் இந்த படம் தாராளமாக போகலாம்...கண்டிப்பாக ஏமாற்றாது!!!

Monday, November 19, 2007

கமெண்ட் போடுங்கள் ப்ளீஸ்!!!!!




முகம் தெரிந்த/தெரியாத சில நண்பர்கள் என் பதிவுகளை படிக்கிறீர்கள் என்பதை என் பதிவின் ஹிட் கௌன்டின் மூலம் அறியமுடிகிறது. அவர்களுக்கு என் நன்றிகள் பல.அப்படி படிக்கும் போது அதில் உள்ள நிறை குறைகளை "கமெண்ட்" வாயிலாக தெரியபடுத்தினால் மிக்க உதவியாக இருக்கும்.தங்களது வலைபூவினை நான் பார்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.எனக்கும் என் பதிவை இவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்ற சந்தோஷம் ஏற்படும்!!! அதனால் நண்பர்களே தயவு செய்து கமெண்ட் எழுதுங்க!!!!!

Friday, November 16, 2007

காங். சிந்திக்கட்டும்: வீரமணி



இலங்கையில் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு முப்படையினரால் கொல்லப்படுவதும் துன்பப்படுவதும் 20 ஆண்டுக் காலமாக நிகழ்ந்து வருகிறதே. அவர்கள் பாதுகாப்புக்காகப் போராடுபவர்கள் விடுதலைப்புலிகள் அல்லவா? இந்தப் பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசிய குற்றமாகும் என்பதைக் காங்கிரசார் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்" என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


"தமிழக முதல்-அமைச்சர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய இரங்கற்பா, எங்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட துயரத்தின் காரணமாக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்தத் தீர்மானத்தினைக் கண்டு உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் இன உணர்வு கொண்ட கோடிக்கணக்கான தமிழர்கள் உண்மையாகவே ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ராஜீவ் காந்தி படுகொலையை எவராலும் ஏற்கவே முடியாது. இதன் விளைவுதான் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு முப்படையினரால் கொல்லப்படுவதும் துன்பப்படுவதும் 20 ஆண்டுக்காலமாக நிகழ்ந்து வருகிறதே. அவர்கள் பாதுகாப்புக்காகப் போராடுபவர்கள் விடுதலைப்புலிகள் அல்லவா? இப்பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசிய குற்றமாகும் என்பதைக் காங்கிரசார் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
கண்ணீர் அஞ்சலிக்காக ரத்தக் கண்ணீர் சிந்துகிறோம் என்று சொல்லி, இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் சக்திகளுக்குத் தோழமைக் கட்சியினர் துணை போகலாமா? கண்ணீர் வடிக்கக் கூடாது, ஆனந்தக் கண்ணீர் உகுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் காங்கிரசார் உருவாக்கலாமா?
வெறும் வாயை மென்றவர்களுக்கு ''இந்த அவலை மெல்லுங்கள்'' என்று தருவதால் என்ன லாபம்? மத்தியில் உள்ள ஆட்சிக்கு மூலக் கல்லாக இருக்கும் தி.மு.க. ஆட்சியை அசைத்துப் பார்த்தால் யாருக்கு நட்டம் - யோசிக்க வேண்டாமா அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேயர்கள் மத்தியில் இது எவ்வகையான சிந்தனைகளை எழுப்பும் என்பதையும் காங்கிரசார் சிந்திக்க வேண்டும்."
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்


சரி இந்த விவகாரத்தில் என்னதான் சொல்ல வருகிறார் வீரமணி??காங்கிரஸ் ராஜீவ் கொலையை மறந்து விடவேண்டும் என்கிறாரா,அல்லது ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக கண்நீர்வடிப்பது தேசத்துரோகம் இல்லை என்கிறாரா??இனிமேலாவது காங்கிரஸ் விழித்துக்கொண்டு இவரை கைது செய்யவேண்டும்.

Wednesday, November 14, 2007

நீரழிவு நோயில் இந்தியா முதலிடம்??






கடந்த சில வருடங்களாக இந்தியாவில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில் சென்றால் இந்தியா இன்னும் சில வருடங்களில் முதலிடம் பிடிக்கும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 மில்லியன்களாகும்.
நாம் நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவந்தால் இதை தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.




அது பற்றி பார்ப்போம்..


1. முதலில் junk foods எனப்படும் சாப்பாடு வகைகளை உண்பதை குறைக்க வேண்டும்.


2. காலையில் எழுந்ததும் சிறிது தூரம் நடைப்பயிற்சியோ அல்லது உடற்ப்பயிற்சியோ மேற்க்கொள்ளவேண்டும்.


3. 2 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக இரத்தப்பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


இந்த இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள நீங்கள் பரிசோதனை மையத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இப்போது இல்லை. நம் இரத்தத்தில் குளுகோஸ் அளவை காட்டும் கருவி இப்போது வந்துவிட்டது. விலை 1500 ரூபாய். அதை வாங்கி வைத்துக்கொள்வது நலம். இல்லை நம் வீட்டில் நம் அம்மா, அப்பா விற்கு இதை வாங்கி கொடுக்கலாம். வழிமுறைகளும் மிகவும் சுலபம்.


நீரழிவு நோயின் அறிகுறிகள்:



1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்


2. எடை குறைதல்


3. தாகம் எடுத்தல்


4. காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருத்தல்.


5. சிலருக்கு கண் பார்வை மங்குதல்.



நோய் வருவதை நம்மால் தடுக்க முடியாது ஆனால் தள்ளிபோடலாமே!!!!மேற்சொன்ன வழிமுறைகளை பின்ப்பற்றி இந்த நோயை தள்ளிபோடுவோம் முடிந்தால் விரட்டுவோம்!!!!





கடைசி செய்தி :

இப்போது நீரழிவு நோய்காக இந்தியாவில் ஒரு புதிய மருந்து கண்டுபிடித்துள்ளனர்.அதன் பெயர் Exenatide. இந்த மருந்து நம் உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி அதிகம் சுரக்க செய்கிறது. இந்த மருந்தின் தாக்கம் 12 மணிநேரம் இருக்குமாம். இது அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tuesday, November 13, 2007

உன்னோடு நான் இருந்த..........


"இருவர்" படமும் பாடல்களும் எத்தனை பேர் பார்த்து கேட்டுருப்பீர்கள் என்று தெரியவில்லை. படமும் பாட்டும் மிக அழகாக இருக்கும். அதில் எனக்கு மிகவும் பிடித்தது படத்தில் வரும் இந்த கவிதை. வைரமுத்துவின் வைர வரிகளில் அட்டகாசமான கவிதை.


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!!!!
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைதைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி!!

பார்வையிலே சில நிமிடம்,
பயத்தோடு சில நிமிடம்,
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்,
இலக்கணமே பாராமல்..
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்,

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!!!!
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதைப்பற்றி அறியவில்லை
யார் தொடங்கி? யார் முடிக்க?ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் ஆசையினை நீயனைத்தாய்!
ஆடை களைந்தேன் வெக்கத்தை நீயனைத்தாய்!

கண்டதிருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர்....
கையில் இன்னும் ஒட்டுதடி!!!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!!!! (2)
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!

Saturday, November 10, 2007

வேல் - விமர்சனம்





என்னுடைய "தீபாவளிக்கு என்ன படம் பாக்கலாம்" பதிவில் இந்த படம் பற்றி மோசமாக எழுதிஇருந்தேன். ஆனால் சூர்யா மற்றும் ஹரி இருவரும் சேர்ந்து என் மண்டையில் நச்சென்று ஒரு குட்டு வைத்ததுபோல் இருந்தது படம்.
வழக்கமான இரட்டைக்குழந்தைகள் கதைதான்!! ஆனால் குடுத்திருக்கும் விதம்?? ஹரி ஒரு பிரமாதமான திரைக்கதை அமைப்பாளர் என்பதை காட்டுகிறது॥



சரண்ராஜ், சரண்யா தம்பதிகளுக்கு இரட்டைகுழந்தைகள் பிறக்க ஒரு குழந்தை இரயிலில் காணாமல் போகிறது. காணாமல் போன குழந்தை நல்லூர் என்ற ஊரில் உள்ள பண்ணையார் நாசரிடம் கிடைக்கிறது. நாசர் அந்த குழந்தைக்கு "வெற்றிவேல்" என பெயரிட்டு வளர்க்கிறார். சரண்யாவிடம் வளரும் இன்னொரு குழந்தை "வாசு" என்ற பெயரில் வளர்கிறது. வேல் என்ற வெற்றிவேல் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் செல்லமாக இருக்கிறான். நாசரின் ஜென்ம விரோதியான கலாபவன் மணிக்கும் வேலுக்கும் தினமும் சண்டைவர, காரணம் flashback கில் தெரிகிறது. இப்படியிருக்க சென்னையில் இருக்கும் வாசு ஒரு தனியார் துப்பரிவாளராக வேலை செய்கிறார். 7up சுவாதியாக வரும் அசினுடன் காதல் கொள்ள அது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தத்தில் முடிகிறது.வாசுவிர்க்கு தன்னுடைய அண்ணன் இருக்கும் இடம் அசின்மூலமாக தெரியவர அண்ணனை அழைத்துவர நல்லூர் செல்கிறார். அவர் அண்ணனை அழைத்து வந்தாரா, கலாபவன் மணி என்ன ஆனார் என்பதுதான் மீதி கதை.
சூர்யா நெஜமாகவே மிக நன்றாக நடித்துள்ளார். அவருக்கு எங்கள் ஊரில்( சிவகங்கை) இருக்கும் வரவேற்ப்பை!!!!!! பார்க்கும்போது அவர் ஒரு இடத்தை பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. இரட்டைவேடத்தில் அவர் காட்டிய வேறுபாடு சூப்பர்!!! அவருக்கும் அசின்னுக்கும் இடையே ரசாயனம் (அதான் Chemistry) நன்றாக உள்ளது. ஆனால் அசின்னுக்கு இந்தப்படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை. அசின் பார்க்க நன்றாக உள்ளார். அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.
வில்லனாக கலாபவன் மணி. அவருடைய நகைச்சுவை கலந்த வில்லத்தனம் புதிதில்லை என்றாலும் ரசிக்க முடிகிறது. நாசருக்கும், அம்பிகாவிர்க்கும்( நாசரின் மனைவி) வேலையே இல்லை. பாட்டியாக வரும் லக்ஷ்மி தான் ஒரு சிறந்த நடிகை என்று காட்டி உள்ளார். எல்லாவற்றுக்கும் மேல் இந்த படத்தில் வடிவேலு இருக்கிறார். அவரை சரியான நேரத்தில் பயன்படுத்தி உள்ளார் இயக்குனர்.
படத்தின் முதல் பாதி வழக்கமாக சென்றாலும் ரெண்டாவது பாதியில் படத்தை தூக்கி நிருத்தயுள்ளது ஹரியின் புத்திசாலித்தனமான திரைகதையும் சூர்யாவின் நடிப்பும்தான். படத்தின் visual effects அட்டகாசம். இரண்டு சூர்யாவும் சேர்ந்து வரும் காட்சிகள் தத்ரூபமாக உள்ளது. ப்ரியன் ஒளிப்பதிவில் புதிதாக எதுவும் செய்யவில்லை.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் யுவனின் இசை। பாடல்கள் மிகவும் சுமார். பின்னணி இசையும் சுமார் ரகம்தான். இயக்குனர் பாடல்கள் மற்றும் முதல் பாதி திரைகதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் வேல் இன்னொரு சாமி ஆக வந்துருக்கும்.


Anyway, வேல் நிச்சயம் நம்மை போரடிக்காது.


மொத்தத்தில் வேல் வெற்றிவேல்

Friday, November 09, 2007

அழகிய தமிழ் மகன் - விமர்சனம்




விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அழகிய தமிழ் மகன் படம் இன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்கு. விஜய் - ரகுமான் காம்பினேஷன்ல பாட்டு ஏற்கனவே ஹிட்டானதுனால நான் பயங்கர எதிர்ப்பார்போட போனேன். ஆனா ரிசல்ட்?? அது எதுக்குகன்னா இப்போ!!!!!!!!!

இந்த படத்தில் விஜய் பேரு குரு. இவரு பெரிய ஓட்டப்பந்தய வீரர். இவரு ஒரு மேட்சுக்கு முன்னாடி கோவில்ல ஹீரோஇன பாக்கறாரு, அப்ப ஹீரோயின் எறும்புக்கு சாப்பாடு வைக்கறாங்க, இத பாக்கும் ஹீரோக்கு லவ் வந்துருது!!!! (எப்பா இப்பவே கன்னகட்டுதே)இதுக்கு அப்பறம் ஒரு ரெண்டு பாட்டு பாடறாரு ஹீரோ!!!

இவங்க காதல் ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு எல்லாரும் சம்மதிசுர்றாங்க!!!! என்னடா இன்னும் இண்டேர்வலே வரலியே அதுக்குள்ள படம் முடியபோகுதானு பாத்தா அங்கதான் கதையில ஒரு திருப்புமுனை!!! ஹீரோக்கு ESP power இருக்கு. ESP னா Extra-Sensory Perception னு அர்த்தம் அதாவது பின்னால நடக்கபோரத முன்னாடியே தெரிஞ்சுகுற சக்தி.இருக்கறது தெரியுது...அப்பாடி இனிமே படம் நல்லா போகும்னு பாத்தா ஒண்ணும் ஆகல!!!!!!!!

இந்த பவர்ல விஜயே ஷ்ரேயாவ கொலபன்றமாதிரி தெரியுது, ஒடனே ஹீரோ மெர்சலாகி மும்பைக்கு போறாரு அங்க பாத்தா இன்னொரு விஜய்!!! அடடா அப்போ நமால கொல்ல போறவன் இவந்தான்னு அவன பிடிக்க போகறப்ப இவருக்கு ஆக்சிடண்ட்!!! அந்த கேப்புல அந்த விஜய் ஷ்ரேயாகிட்ட போய் சேர்ந்துடுராறு...குரு எப்படி மறுபடியும் ஹீரோயினோட join ஆறாறு...இத தான் 3 மணி நேரம் சொல்லிருக்காங்க!!!!!

இது ஒரு நல்ல கதைதான், ஆனா படுமோசமான திரைக்கதை நம்ம பொறுமைய ரொம்ப சோதிச்சுருச்சு!!!!!படம் ஆரம்பிச்சு 1 மணிநேரம் வரை படம் எங்க போகுதுன்னு தெரியல। அப்பறமா கதைக்கு வந்து interval வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு!!!!

விஜய் எப்பதான் நடிக்க போறாரோ தெரியல। நேத்து வந்த ஜீவா கூட நடிபிலையும் நல்ல கதை தேர்ந்துஎடுகுரதுளையும் கலக்குறாரு ஆனா விஜய்?? சீக்கரம் தன்னோட வழிய மாத்தலேன்னா ரொம்ப கஷ்டம். அந்த இன்னொரு விஜய், அவர பாக்கும்போதெல்லாம் நம்மக்கு செம கடுப்பு வருது!!!எப்போபார்த்தாலும் ஒரு துள்ளலோட நடை அவர் பண்ற கொனாங்கி சேட்டை எல்லாம், sorry lts very boring.

ஹீரோயின் ஷ்ரேயா வழக்கம் போல நடிக்க வேலையே இல்ல!!! வந்து டான்ஸ் ஆடிட்டு போறாங்க!! நமீதா அதுக்கு மேல, ரெண்டாவது விஜய் நமிதாவ train ல மீட் பண்ணுவாரு ஒடனே ஒரு பாட்டு நமீதா லவ் பண்ண ஆரம்பிச்சுருவாங்க அப்பறம் ----------- நடந்துரும்। அவ்ளோதான் அதுக்கு அப்புறம் நமிதாவ காட்டவேமட்டாங்க. climax ல நமீதா pregnant ஆகி அந்த விஜய பாத்து அவரோட சேந்துருவாங்க.இப்படி ஒரு அபத்தக்கலஞ்சியம் எந்த படத்துலயும் இல்ல. கருமம் கருமம்.Ashish Vidhyaarthi and Saayaji shinde ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்ல நடிக்க.

விஜய் சொந்தமா கதை கேட்டு நடிச்சா எப்படி இருக்கும் ? ATM மாதிரிதான் இருக்கும்।இனிமே Mahesh babu படத்தையும் ரீமேக் பண்ணமுடியாது. பேசாம hindi, malayalam nu try பண்ணிபாக்கலாம்.

சரி அப்ப படம் எப்படி இருக்கு?? இதுக்குமேல அதசொல்லனுமா என்ன??

Tuesday, November 06, 2007

கில்லி போயி பைரவி வந்தது டும் டும் டும்!!!!!!

ஞாயிற்றுகிழமை ஒரு செம காமெடி நடந்தது, அத எத்தனபேரு பாத்தீங்கன்னு தெரியல.அதான் நம்ம சன் டி.விக்கும் கலைஞர் டி.விக்கும் நடந்த "டிஷ்யூம் டிஷ்யூம்" தான் அது.


நான் கொஞ்சம் விரிவாவே சொல்றேன்.




சன் டி.வில சண்டே மத்யானம் திடீர்னு ஒரு நியுஸ் போட்டான், என்னனு பாத்தா "தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா இன்று பகல் 11.30 க்கு காணத்தவராதீர்கள்" அப்படீன்னு. என்னடா இது விருது வழங்கின விழாவ கலைஞர் டி.வி தான் தீபாவளி அன்னிக்கு போடபோராங்களே பின்ன இவங்க எப்படி போடுவாங்கனு பாத்தா கரெக்டா 11.30 க்கு போட்டான்.சரின்னு நம்ம தானைத்தலைவி நமீதாவோட ஆட்டத்த வாயபோலந்து பாத்துட்டே இருந்தேன். அப்பறம் ஏதேச்சயா கலைஞர் டி.வி பக்கம் போனா அங்க நம்ம இளைய தளபதி!!!! "ஆச்சு வூச்சு னு ஓடி வராரு". அடடா கில்லி படம் கலைஞர் டி.வி ல போடறாங்களே னு பாக்க ஒக்காந்துட்டேன். அது எனக்கு ரொம்ப புடிச்ச படம் வேறயா, பயாங்கரமா ரசிச்சு பாத்துட்டு இருந்தேன். ஒரு அறைமணி நேரம் ஓடிச்சு படம் திடீர்னு கில்லி போயி பைரவி படம் வந்துருச்சு, என்னடா இது கொடுமைனு சன் டி.வி போயி நம்ம தலைவியவே பாப்போன்னு போனா அங்கயும் விழா நிகழ்ச்சிய கட் பண்ணிட்டு நந்தா படம் போட்டுட்டான். என்ன பிரச்சனை னு யோசிச்சு யோச்சிசு மண்டை கொழம்பி போச்சு. அப்பறம் நம்ம தோஸ்து ஒருத்தன் தான் எல்லா மேட்டரையும் சொன்னான். அட வெண்ணைகளா ஒங்க சண்டைல ஏண்டா எங்கள போட்டு கொல்றீங்கனு தோணுச்சு.
அவசரகுடுக்க தானமா படத்த போட்டு நல்லா வாங்கி கட்டிகுச்சு சன் டி.வி. என்ன இருந்தாலும் இராஜதந்திரத்தை கரைத்து குடித்தவர் அல்லவா கலைஞர்!!!




பி.கு: படிச்சவுடன் தயவுசெய்து கமெண்ட் எழுதுங்க!!!!!

Monday, November 05, 2007

கருணாநிதியும் விடுதலைப்புலி ஆதரவும்!!!

கலைஞர் எப்போதுமே விடுதலைப்புலி ஆதரவாளர்தான். அது இப்போ இன்னும் ஒரு தடவை வெளிச்சத்துக்கு வந்துருக்கு. போன வெள்ளிக்கிழமை இலங்கை அரசு செய்த வான்வெளி தாக்குதலில் விட்தளைப்புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகர் சு.ப.தமிழ்செல்வன் கொல்லப்பட்டார். இதை கண்டித்து கலைஞர் ஒரு இரங்கல் கவிதை எழுதி பத்திரிகைகளுக்கு கொடுத்தார். இது தான் இப்போது சூடுபிடித்து உள்ளது. ஜெயலலிதா உடனே ஒரு கண்டன அறிக்கை கொடுத்தார், அதில் "எப்படி ஒரு மாநில முதல்வர் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பிரதிநிதிக்கு ஆதரவாக எப்படி கருத்து கூறலாம் என்று கேட்டுள்ளார். மேலும் இதன் மூலம் கருணாநிதி அரசியல் சாசன விதிமுறைகளை மீறிவிட்டார் அதனால் மத்திய அரசு கருணாநிதி தளமைலான அரசை கலைத்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்" என்று கேடுகொண்டுள்ளார்.

இதில் ஜெயலலிதா தான் ஒரு தீவிரவாதிகளின் விரோதி என்று மீண்டும் ஒரு முறை சொல்லாமல் சொல்லி விட்டார். நியாயமாக மத்தியஅரசு கருணாநிதிஇடம் கேள்வி கேட்கவேண்டும் ஆனால் கண்டிப்பாக எதுவும் கேட்காது.தங்கள் தலைவரைக்கொன்ற இயக்கத்தை ஆதரிக்கும் ஒரு தலைவரை கூட்டணியில் வைத்துக்கொண்டு அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒரு கட்சயிடம் நாம் இதைஎல்லாம் எதிர்பார்க்க முடியாது. :) எப்போது தான் காங்கிரஸ் கும் அதன் தலைவர்களுக்கும் முதுகெலும்பு வருமோ!!! ஒரு தேசிய கட்சியின் நிலைமை இப்படியா சீரழிய வேண்டும்.

என்ன கொடுமை சார் இது!!!!

என்ன படம் பாக்கலாம் தீபாவளிக்கு!!! 2



2. பொல்லாதவன்

சூப்பர் ஸ்டாரோட மருமகன் நடிச்சு ரிலீஸ் ஆகபோறபடம்.ஜோடி குத்து ரம்யா( இப்போ திவ்யா). ஜி.வீ.பிரகாஷ் மியூசிக் ல பாட்டுஓகே. எனக்கு என்னமோ இந்த படம் கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது



3 .கண்ணாமூச்சி ஏனடா!!!!


"கண்டநாள் முதல்" டைரக்ட் பண்ணின ப்ரியாவோட செகண்ட் வென்ச்சர் இது.ராதிகா தான் தயாரிப்பாளர். பிரித்விராஜ் அண்ட் சந்த்யா லீட் ரோல்ல நடிக்குறாங்க.சத்யராஜ் கூட இந்த படத்துல வயசுக்கு ஏத்த ரோல்ல நடிக்குறார். பட ஸ்டில்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. கண்டநாள் முதல் மாதிரி இந்த படமும் ஹிட் ஆகுமா??




4 வேல் :


இது சூர்யா நடிச்சு ஹரி டைரக்ட் பண்ணி ரிலீஸ் ஆகபோற படம். இன்னும் ஒரு தாமிரபரணி மாதிரி இருக்கு. பாட்டும் சுமார்தான். இது ஓடும்னு சுத்தமா நம்பிக்கை இல்ல.



5. மச்சக்காரன்:


இதுல ஜீவன் காம்னா இருக்காங்க. காம்னா இதயத்திருடன் படத்துக்கு அப்பறம் நடிக்கும் படம். இந்த படத்துல லிப் கிஸ்லாம் இருக்கு சொல்றாங்க. ஜீவன் நெஜமாவே மச்சக்காரன் தான்( வயித்தெரிச்சல் தான் வேற என்ன).

Thursday, November 01, 2007

என்ன படம் பாக்கலாம் தீபாவளிக்கு!!!

1.அழகிய தமிழ் மகன்
2.பொல்லாதவன்
3.கண்ணாமூச்சி ஏனடா!!
4. வேல்
5. மச்சக்காரன்

1.அழகிய தமிழ் மகன்!!!!

இது நம்ம விஜய் படம்!!!வழக்கமான படமா இல்லாம இருந்தா பாக்கலாம்!!விஜய் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்கும் படம் இது தான்! இந்த படதோட பெறிய ப்ளஸ் ஏ.ஆர்.ரஹ்மான்.பாட்டு எல்லாம் எஃப்.எம் புன்னியத்துல ஹிட்டாயிடுச்சு!!!படம் ஹிட்டாகுமா??

மற்ற படங்கள் பற்றிய பார்வை விரைவில்!!!!!!!!!

Thursday, July 12, 2007

PRATIBHA PATIL??????????????





Pratibha Patil....Indha peru than ippo India fulla kaekudhu...Ivangathan nammaloda adutha President a vara poranga.Oru vazhiya Kalam a potti thooka vachutaanga...


Infact indha President post appadeengaradhu chumma oru Gethu thane thavira vera onnum panna mudiyadhu...Enna oru naalu peraukku college seat recommend pannalam avalavuthan...


Aana idhu varayum indha President election ippadi oru mosama irundhadhu illa...Oru Cinema pola appappa evlo twists and turns..Adhu ellam onnu onna paapom...




1. First President post ku electiona epponu EC announce panna odanae naade pathikichu..


2. Ellarum ishtathuku oru survey eduthaanga (KARUTHUKANIPPU sollavae bayama irukku TAMILNADU la).Adhula majority vote namma APJ Abdul Kalam kuthan.


3. Aana avara yaarum consider pannavae illa.Ippo than ovvoru pera adipada aarambichudu.


4. Athula mudhalla "Pranab Mukerjee, Somnath Chaterjee, Shivraj Patil, Karan Singh appadinu dinamum oru pera sonnanga.


5.Idhula Pranab peru firstae adipatupochu, yaenna avara President a potta Sonia pecha kaekamataru nu andha amma nenachanga.Oru CPI leader presidenta varadhum avangaliku pidikala.Avanga Shivraj Patil pera sonnaga, avara CPI ku pidkkala adhe kadhi than Karan Singh kum.


6.Indha gapla NDA "BironeSingh Shegawath" than enga vetpalarnu sonnanga.


7.UPA ku oru decision edukka vendiya kattayam, Odanae Shegawath a mannakavva vekanumna namma edhavadhu pudusa pannanum nu nenachu ellarayum Delhi vara sonnaga.Namma Thatha vum Delhi ponaru appothan vnadathu adutha sikkal.


8.Namma paatukku oru pen vetpalar nu sollitomae aana yaara select panradhunu kuzhambi thavichanga.Ovvoru pera paathu edhulayum thrupthi illama irundaanga.


9.Indha edathathan ellarum gavanikanum...Election announce panni ithana nalla varaikum "Pratibha" ra peru velilla varavae illa..Ennamo avanga "Pengalin Munnetrathuku than naana oru pen vetpalarai select pannirukom nu solradhu ellam muzhu "NAMITHA" vayae sothukulla adaikura maadiri".


10.Kadaisiya oru vazhiya "Pratibha" ammava select pannaga.Idhulayum oru vishayam irukku.


Pratibha vum Shegawath um ore "JAATHI".Inga than jaathi illama yeduvumae nadakade.Merkondu Pratibha "Maharashtra" manilatha sernthavunga adhanale Shivsena voda support nakku kedikum nu nenchanga.Andha nenaipu veen pogala Shivsena ippo "ENGAL VOTTU MARATIYA MANGAIKAE" nu solliruchu.


11.Ippo INTERVAL!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :) poi ellarum Tea, Coffee kudichutu vaanga..Bayangaramana action scene ellam inimaethan varum...!!!!!!!!




Interveluku apparam naalaiku thodarum...

Tuesday, February 20, 2007

G.O(Government Orders)??????????




Indha varusham startinglayae Kalaigar oru ahirady arivippu pannar.
Indha theatre Tickets laam bayangarama korachu oru G.O pottar.
Aana Rendu naal kalichu oru anthar balty adicharu...Athavadhu itulla Mutiplex, and Complex theatres llam varadhunu sollittar.
Sari adhellam Multiplex ku matumthanu nenachu theatre ku pona..Summa koovi Koovi vikiruaanga Black la...Govt Order pottuchuppa nu sonna....Nammala andha thittu thitran andha kamanatty....Nan mundhanethu Kamala theatre la "Pachaikili Muthucharam" paaka ponen.
Counterla Housefull board maatiaachu but ore naalu peru koovi koovi Black la ticket vikuranga.
Counter la 40 Rs na Blackla 70 Rs.Vera vazhi pasanga nacharippu thaangama nanum 3 ticket vanginen.

Apparam another super GO vandhu City Autos pathi....





Government City auto fares ellam revise panni oru chart pottanga and namma transport minister "Nehru" kandippa ella autos layum meter kandippa irukanum nu sonnar.Athu nadamuraiku vandhu kittathata oru masam aachu....But edhuvarikum endha oru autovum revised charge vanginathe illa.Ellam flat rate than....
T.Nagar to Adyar ponuma 150 kudu....
Adyar to Mugaper a 200 kudu.....
Padhi sottha autokae eludhivekka venum pola.
Enaku romba naala oru santhegam B'lore la eppadi meter pottu auto ootranga....
But they use Gas for autos with government approval....Anga auto is the best(cheap) mode of transport than Bus..Inga namma government yen athu madhiri follow panna koodathu????

Kalaingar konjam idha followup panna thevala.....Infact namma naatula ulla major problem ae idhuthan...Followup???
Yarum endha oru vishayathayum followup panradhu illa....Media ku anniku enna hot news irukko athan.....Makkalukkum appadithan.....Yarukkum kavala illa??????Enaku mattum yen indha kavala....Nayanthara Kiss photo va mail la pathoma adha nalu prukku forward pannomanu irukka vendiyathu than.
Appada..Romba naala Blog pakkamae varama inniku sema "MOKKA" post onnu pottachu....
Yaravadhu padhicha....Commentla thitunga...Varatta....